6.05.2009

புரிதல்

என்ன கருவில்
கவிதை எழுதுவது...
நீண்ட நாள்
ஆழமான யோசனையில்
அபூர்வமாய் கிடைத்தத
தலைப்பு
நான்....

எழுதத் தொடங்கினேன்
நிமிடங்கள் கரைந்து
மணிகளாகி
நாட்களோடு நடைபயின்று
வருடங்களைத்
தாண்டிவிட்டது
இன்னும் முடியவில்லை
கவிதை...

தெரியாத விடயங்களை
எழுதுவது
எப்படி?


17 comments:

நட்புடன் ஜமால் said...

கவிதை நல்லாயிருக்கு.

‘நான்’

பற்றிய புரிதல் அவ்வளவு எளிதில் வராது

வரும் போது அது ‘நான்’ஆக இருக்காது
‘அவன்’ஆக மாறலாம்.

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//நான்’

பற்றிய புரிதல் அவ்வளவு எளிதில் வராது

வரும் போது அது ‘நான்’ஆக இருக்காது
‘அவன்’ஆக மாறலாம்.//


ம்ம்ம்ம் ...
நீங்க அனுபவ சாலி போங்கோ.
இதெல்லாம் இந்த மரமண்டைக்கு எங்க விளங்க போகுது.

நன்றி அண்ணா

S.A. நவாஸுதீன் said...

கவிதையின் கரு (நான்)பற்றி எதுவுமே கூறாமல் எல்லாம் கூறிவிட்டது அசத்தல்

மதிபாலா said...

அருமை.

ஆனால் உங்க பெயரே வெளங்கலை தலைவரே. இதில் கவிதெ மட்டும் ?

நல்லாருக்கு.

மயாதி said...

மதிபாலா said...
அருமை.

ஆனால் உங்க பெயரே வெளங்கலை தலைவரே. இதில் கவிதெ மட்டும் ?

நல்லாருக்கு.//

நன்றி

உங்க பெயரே வெளங்கலை தலைவரே. இதில் கவிதெ மட்டும் ?

இந்த கேள்வி சரியாக விளங்கவில்லை , கொஞ்சம் விளக்கமாக கேட்டால் பதில் சொல்கிறேன்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
This comment has been removed by the author.
ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பொருள் இல்லாமலே ஒரு கவிதை. அபாரம்.

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

//பொருள் இல்லாமலே ஒரு கவிதை. அபாரம்.//

நன்றி
ஒரு சின்ன சந்தேகம் சகோதரி , உங்கள் பெயர் சொந்த பெயரா புனை பெயரா ?
மிகவும் அருமையாக இருக்கிறது அதுதான் கேட்டேன் !

மதிபாலா said...

இந்த கேள்வி சரியாக விளங்கவில்லை , கொஞ்சம் விளக்கமாக கேட்டால் பதில் சொல்கிறேன்..//

மாயாவி கேள்விப்பட்டிருக்கேன்.

வாயாடி கேள்விப்பட்டிருக்கேன்..
மாயா கேள்விப்பட்டிருக்கேன்

அட அவ்வளவு ஏன் ஆயா கேள்விப்பட்டிருக்கேன்...

அதென்ன மயாதி?

மயாதி said...

அது ஒன்றும் தப்பான அர்த்தம் அல்ல , ஆனாலும் அதை வெளியே சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன் ! சொல்லுவதால் நான் கைது செய்யப்படலாம் . நமக்குத்தான் ( அதாங்க தமிழன்) எந்த உரிமையுமே இல்லையே..பெயரைச்சொள்ளக்கூட..
வேண்டுமானால் உங்கள் மெயில் அட்ரஸ் கொடுத்தால் அர்த்தத்தை அனுப்பி விடுகிறேன்...

வலசு - வேலணை said...

//
தெரியாத விடயங்களை
எழுதுவது
எப்படி?
//
இப்படித்தான்...
:-)

மயாதி said...

வலசு - வேலணை said...

//
தெரியாத விடயங்களை
எழுதுவது
எப்படி?
//
இப்படித்தான்...
:-)


நன்றி நண்பா!
நான் வலைத்தளத்திற்கு புதியவன் , சத்தியமாக எனக்கு :-) இந்த குறியீட்டின் அர்த்தம் தெரியாது , கொஞ்சம் சொல்வீர்களா?

நாணல் said...

ஹ்ம்ம்ம் உண்மையான் தேடல்.. கவிதை அருமை..

ny said...

அழகிய படிமம் :)

மயாதி said...

நாணல் said...
//
ஹ்ம்ம்ம் உண்மையான் தேடல்.. கவிதை அருமை..//


நன்றி...

மயாதி said...

kartin said...

//அழகிய படிமம் :)//

thanks

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மயாதி கேட்கிறார்,
// ஒரு சின்ன சந்தேகம் சகோதரி , உங்கள் பெயர் சொந்த பெயரா புனை பெயரா ?
மிகவும் அருமையாக இருக்கிறது அதுதான் கேட்டேன் !//

இது புனை பெயர் தான் நண்பரே , எனக்குப் பிடித்த பெயர்.