6.28.2009

கொஞ்சும் கவிதைகள் கொஞ்சம்....




உலகத்தில்

அதிகம்
தொலைந்து

போவதும்
களவாடப்படுவதும்
இதயம்
ஒன்றுதான்...

இருவரும்
கை கோர்த்து
நடக்கும்
வீதி
நெடுக
வீழ்ந்து
கிடக்கின்றன
பொறாமைக்
கண்கள் ....

தேவாரம்
பாடி
கோயில்
கதவுகளைத்
திறப்பது
ஒன்றும்
பெரிய வேலையில்லை
உன்
இதயக் கதவுகளைத்
திறப்பதைக்காட்டிலும்...

(மீள் இடுகை )


6 comments:

Anonymous said...

வார்தைகளே இல்லை.....இவ்வளவு நயமுற எழுதும் வாய்ப்பு எனக்கு இனி என்றும் இல்லவே இல்லை....எனக்கு தெரிந்தது கவிதைகள் மட்டுமே அதையும் மறக்க செய்கின்றது உன்னுடைய கவிதை

S.A. நவாஸுதீன் said...

உலகத்தில்
அதிகம்
தொலைந்து
போவதும்
களவாடப்படுவதும்
இதயம்
ஒன்றுதான்...

களவு போவது கிடைக்கப்பெருவதும் இங்கேதான்

அன்புடன் அருணா said...

அழகா இருக்கு.......இதையக்கதவுகள்....இதயக் கதவுகள்தானே?...சரியா???

மயாதி said...

தமிழரசி said...

வார்தைகளே இல்லை.....இவ்வளவு நயமுற எழுதும் வாய்ப்பு எனக்கு இனி என்றும் இல்லவே இல்லை....எனக்கு தெரிந்தது கவிதைகள் மட்டுமே அதையும் மறக்க செய்கின்றது உன்னுடைய கவிதை//

பொய் தானே !

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

உலகத்தில்
அதிகம்
தொலைந்து
போவதும்
களவாடப்படுவதும்
இதயம்
ஒன்றுதான்...

களவு போவது கிடைக்கப்பெருவதும் இங்கேதான்

June 28, 2009 2:5

நன்றி நவாஸ் அண்ணா

மயாதி said...

அன்புடன் அருணா said...

அழகா இருக்கு.......இதையக்கதவுகள்....இதயக் கதவுகள்தானே?...சரியா???

June 28, 2009 7:13 அம//

ஓ... எழுத்துப் பிழை ! திருத்தி விடுகிறேன்

நன்றி