6.12.2009

கடவுளிடம் சில ????

இந்தக் கவிதை மூன்றும் வேறு வேறு ஒன்றோடு ஒன்று தொடர்பு அற்றவை. எந்தமதத்தைக் காயப்படுத்தவும் சொல்லவில்லை, வெறுமனே கடவுளின் பெயரில்இங்கு நடக்கும் அக்கிரமங்களை சொல்வதற்காக மட்டுமே.









கண்ண பிரானே
மீண்டும்
எந்த மதத்தவனாக
அவதரிப்பாய்?





இந்த உலகத்தின்
பாவங்களைச்
சுமப்பதற்கு...
ஒரு சிலுவை
போதுமா ?






அல்லாஹ்வே
இந்த மனிதர்களை
நம்பி
மசூதிகளில்
இருந்துவிடாதீர்கள்...
உடைத்து விடுவார்கள்!

7 comments:

தமிழிச்சி said...

மயாதி, அப்பாடா இந்தக் கவிதை புரிகிறது. அப்படி என்றால் கண்ணன் வந்து யேசுவாய் பிறந்தார் என்கிறீர்களா? கவனம் . யாரிடமாவது வாங்கிக் கட்டப் போகிறீர்கள்..ha..ha

மயாதி said...

ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லை...
மூன்றும் வேறு வேறு கவிதைகள்..

sakthi said...

உங்கள் ஆதங்கம் புரிகின்றது

Poornima Saravana kumar said...

இந்த உலகத்தின்
பாவங்களைச்
சுமப்பதற்கு...
ஒரு சிலுவை
போதுமா ?
//

நிச்சயம் போதாது:(

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எங்கள் நாட்டில் சிறுவர்கள் உட்பட பலர் சிலுவை சுமந்து விட்டார்கள் மயாதி.
ஏசுவும் எந்தப் பாவமும் செய்யவில்லை ,இப்போ சுமந்தவர்களும் பாவம் செய்யவில்லை.

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
//
எங்கள் நாட்டில் சிறுவர்கள் உட்பட பலர் சிலுவை சுமந்து விட்டார்கள் மயாதி.
ஏசுவும் எந்தப் பாவமும் செய்யவில்லை ,இப்போ சுமந்தவர்களும் பாவம் செய்யவில்லை.
//


உங்கள் நாடு என்று எதை சொல்லுகிறீர்கள் நண்பி. ?
இலங்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இலங்கைப் பற்றி வெளி நாட்டில் இருந்து பேசுகிறீர்கள், நான் இலங்கையில் இருந்தே பேசுகிறேன்....
நம் நாடு என்று சொல்ல மனசு இல்லை, நமக்குத்தான் நாடு இல்லையே?

மயாதி said...

Poornima Saravana kumar said...


இந்த உலகத்தின்
பாவங்களைச்
சுமப்பதற்கு...
ஒரு சிலுவை
போதுமா ?
//

நிச்சயம் போதாது:(//

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..