சூடிக்கொள் பூ ..
பூக்கூடையில்
தவறி விழுந்த
வண்டு
சொன்னது
சீ எல்லாமே
செத்துப்போனவை.....
உண்மைதான்
பறிக்கும் போதே
செத்துப் போகின்றன
பூக்கள்...
பறிக்கப்படும்
போது ...அழகு
குறைந்து
போவதைக் கூட
உணரமுடியாத
பார்வைக்கோளாறு
நமக்கு...
உயிரோடு
இருக்கும்
பூக்களையும்
கொன்றுவிட்டு
ரசிக்கும்
வக்கிர மனசுதான்
வாய்த்திருக்கிறது
எனக்கு
சேத்துப்
போனாலும்
மோட்சம்
அடைகின்றன
சாமிக்கு
சாத்தும்
பூக்கள்
செத்துப்
போனாலும்
திரும்பவும்
உயிர் பெறுகின்றன
நீ
சூடிக்கொள்ளும்
பூக்கள்...
சூடிக்கொள்
உயிர் கொள்ளட்டும்
நிறைய
பூக்கள்..
5 comments:
சூடிக்கொள்
உயிர் கொள்ளட்டும்
நிறைய
பூக்கள்..\\
அதனால் தான் பூவையர் என்று சொல்றாங்களோ!
செத்துப்
போனாலும்
திரும்பவும்
உயிர் பெறுகின்றன
நீ
சூடிக்கொள்ளும்
பூக்கள்...
சூடிக்கொள்
உயிர் கொள்ளட்டும்
நிறைய
பூக்கள்..
நல்லா இருக்கு மயாதி.
வாடமலர்கள் உன் வார்த்தை மடல்கள்
சூடா மலராயினும் சுவைக்கும் மடல்கள்......
பூக்களுக்கு பாமாலையா ?
வாழ்த்துகள்
நல்லா இருக்கு மயாதி...
இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை ட்ரிம் பண்ணியிருக்கலாம்...
Post a Comment