யோசிக்காமலேயே
வருகின்றன
நிறைய கவிதைகள்
உன்னைப் பற்றி
நினைக்க நினைக்க .....
ஒரு கவிதைக்கான
கரு எப்படி
சிதறிக் கிடக்கிறது
பாருங்கள்...
அவள் உடைத்துப்
போட்ட....
கச்சான் கோதுகள்
உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.
உன் அழகு
பொத்தி
வைக்கப்பட முடியாமல்
நிரம்பி
வழிகிறது
என் கவிதைகளில்...
12 comments:
கவிதைகளில் வார்த்தைகளின் அழகு நிரம்பி வழிகிறது:)
//உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.//
அழகான வரிகள்
//கச்சான் கோதுகள்//
இதற்க்கு அர்த்தம் தெரியல மயாதி
வழியுது... வழியுது!!
//கச்சான் கோதுகள்//
எனக்கும்...!!
நன்றி வசந்த்
நன்றி முத்து ராமலிங்கம்
கச்சான் peanuts
கோதுகள் என்பது பேச்சு மொழியில், வெளியே உள்ள உறை.
Thamizhmaangani said...
கவிதைகளில் வார்த்தைகளின் அழகு நிரம்பி வழிகிறது:)//
நன்றி தோழி..
//உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.//
ம்ம்ம் சரியாகத்தான் இருக்கும்.
கவிதை கடாட்சமா நீ ? இல்லை அட்சய பாத்திரமா? அள்ளும் முன்னே வழிவது போல் விழி கொள்ளும் முன்னே பொழிகிறாயா?
திறமைக்கு பாராட்ட வார்த்தை தேடுகிறேன்....
மிகவும் அழகாக உள்ளது
ஜெஸ்வந்தி said...
//உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.//
ம்ம்ம் சரியாகத்தான் இருக்கும்.//
எனக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லையே
தமிழரசி said...
கவிதை கடாட்சமா நீ ? இல்லை அட்சய பாத்திரமா? அள்ளும் முன்னே வழிவது போல் விழி கொள்ளும் முன்னே பொழிகிறாயா?
திறமைக்கு பாராட்ட வார்த்தை தேடுகிறேன்....//
எத்தனை வார்த்தை வேண்டும் என்று கேளுங்கள் தருகிறேன்..
raj said...
மிகவும் அழகாக உள்ளது
நன்றி ராஜ்.
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்
Post a Comment