6.04.2009

அந்திவானம்


மு. கு - இந்த பத்து கவிதைக்கும் தலைப்பு அந்திவானம்.



ஒன்று

அப்படியென்ன சோகம்
அழுதழுது
கண்கள் இப்படி
சிவந்து போனதே
அந்திவானம்...

இரண்டு
சூரியன் எரிந்து
தனலாகிப் போய்
கிடக்கிறது ...

மூன்று
நீ
ஒரு தடவை
வெட்கப்பட்டு
காட்டு...
சிவப்பு வர்ணம்
பூசி போலியாக
வெட்கப்பட முயற்சிக்கிறது
அந்தி வானம்...

நான்கு
அந்திவரை தீவிரவாதி
அந்தி வந்தால்
அகிம்சா வாதி
சூரியன்..


ஐந்து
என்னமாய் ஒளிந்திருந்து
நிலவை ரசிக்கிறது
பாருங்கள் ..
சூரியன்
என்ன செய்ய
வெட்கம்
காட்டிக்கொடுத்து
விடுகிறது...


ஆறு
பகல் முழுக்க
எங்களை
சுட்டெரித்த சூரியனே
உன்னை இப்படி
சுட்டுப்போட்டது
யார்?


ஏழு
சூரியன் தேய்ந்து
போகிறது...
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
நிலவாகிவிடும்..

எட்டு
அங்கேயும் தமிழர்களா?
இப்படி ரத்தம் சிந்திக்
கிடக்கிறதே...


ஒன்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
கடலில் கரைகிறது
சூரியன்
என்றோ ஒரு
நாள் முத்தாகும்
என்ற நம்பிக்கையில்
குளித்துக்கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்


பத்து
இந்த மேகங்களுக்கு
எப்பவும் இதே
வேலைதான்

கருமேகம் என்ற
பெயரில் தண்ணீரால்
வானத்தை
பாரம் ஏற்றும்..

இடையிடையே
சூரியனை மறைத்து
வானத்தை
கறுப்பாக்கும்

மின்னல் என்ற
பெயரில்
வானுக்கு
மின்சாரம்
பாச்சும்..

முட்டி மோதி
இடி இடித்து
வானத்தை
பிளக்கும்...

எங்கள்
பெண்களைப் போல
அப்பாவி வானம்
அந்தியில் கோபப்பட்டு
சிவப்பதைவிட
வேறென்ன செய்ய
முடியும்.......?

19 comments:

நட்புடன் ஜமால் said...

புதுமை செய்து கொண்டேயிருக்கின்றீர்கள்


அழகு கவிதை தொகுப்பு.

நட்புடன் ஜமால் said...

சூரியன் தேய்ந்து
போகிறது...
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
நிலவாகிவிடும்..\\


சற்றே நிறுத்திவிட்டது எனது வாசிப்பை.

ஆ.சுதா said...

மூன்றும் எட்டும் பிடித்திருக்கின்றது

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//புதுமை செய்து கொண்டேயிருக்கின்றீர்கள்


அழகு கவிதை தொகுப்பு.//


தவறாமல் வந்து வாழ்த்திவிட்டு போறீர்களே...
உங்களை போன்றோரால் தான் ஏதோ இப்படியாவது எழுத முடிகிறது...

நன்றி அண்ணா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கவிதையும் கவர்கிறது. புதுமையும் கவர்கிறது. தொடரட்டும் கவிதை வெள்ளம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
ஒரு தடவை
வெட்கப்பட்டு
காட்டு...
சிவப்பு வர்ணம்
பூசி போலியாக
வெட்கப்பட முயற்சிக்கிறது
அந்தி வானம்...//

ரகளையான வரிகள்.....

சவிதா said...

அருமையான யோசனை.. ஒரு அந்தி வானம் இவ்வளவு கவிதைகளை தனக்குள் வைத்திருப்பது நிஜம்.

நாணல் said...

ella kavithaiyum azhagu...nalla karpanai...

//எங்கள்
பெண்களைப் போல
அப்பாவி வானம்
அந்தியில் கோபப்பட்டு
சிவப்பதைவிட
வேறென்ன செய்ய
முடியும்.......?//

ennai migavum kavarndhadhu...

தராசு said...

//நான்கு
அந்திவரை தீவிரவாதி
அந்தி வந்தால்
அகிம்சா வாதி
சூரியன்..//

கலக்கல் தல.

vasu balaji said...
This comment has been removed by the author.
மயாதி said...

ஜெஸ்வந்தி said...
//உங்கள் கவிதையும் கவர்கிறது. புதுமையும் கவர்கிறது. தொடரட்டும் கவிதை வெள்ளம்.//

நன்றி தோழி

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//சூரியன் தேய்ந்து
போகிறது...
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
நிலவாகிவிடும்..\\


சற்றே நிறுத்திவிட்டது எனது வாசிப்பை.//

ஐயோ மிச்சத்தை வாசிக்கவில்லையா ?

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said.

//மூன்றும் எட்டும் பிடித்திருக்கின்றது//

அப்பா என் கவிதை பிடிக்கலையா ?
ஹி ஹி ஹி .

நன்றி முத்து.......

vasu balaji said...

எல்லாமே அருமை. பாராட்டுக்கள்.

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

//நீ
ஒரு தடவை
வெட்கப்பட்டு
காட்டு...
சிவப்பு வர்ணம்
பூசி போலியாக
வெட்கப்பட முயற்சிக்கிறது
அந்தி வானம்...//

ரகளையான வரிகள்.....///

நன்றி வசந்த் அண்ணா !

மயாதி said...

நாணல் said...

//ella kavithaiyum azhagu...nalla karpanai...

//எங்கள்
பெண்களைப் போல
அப்பாவி வானம்
அந்தியில் கோபப்பட்டு
சிவப்பதைவிட
வேறென்ன செய்ய
முடியும்.......?//


நன்றி நாணல்

மயாதி said...

தராசு said...

//நான்கு
அந்திவரை தீவிரவாதி
அந்தி வந்தால்
அகிம்சா வாதி
சூரியன்..//

கலக்கல் தல.//

நன்றி ...
பெயர் வித்தியாசமா இருக்கே?

மயாதி said...

பாலா... said...

//எல்லாமே அருமை. பாராட்டுக்கள்...//

நன்றி.பாலா....

மயாதி said...

வடிவேல் விஜிதரன் said...

//அருமையான யோசனை.. ஒரு அந்தி வானம் இவ்வளவு கவிதைகளை தனக்குள் வைத்திருப்பது நிஜம்.//

வந்துட்டிங்களா தல...
வாங்க வாங்க ...