6.10.2009

ஐயோ எனக்கு விருதாமே!

சின்ன வயசில்
நான் அதிகம்
தோற்றுப்போனது
பட்டாம்
பூச்சியிடம்தான்....

என்னிடம்
சிக்காமல்
பறக்கும்
பட்டம் பூச்சியையும்
சந்தோசமாகத்தான்
ரசித்தது மனசு

அந்த வயசிலேயே
இப்படி
தோல்விகளை
ரசிக்கும்
பக்குவத்தைக்
கற்றுக்கொடுத்தது
பட்டாம் பூச்ச்சிதான்


இப்போதும்
பட்டாம் பூச்சி
பறக்கும் போது
சேர்ந்து பறக்கிறது
மனசும்


பட்டாம் பூச்சிகள்
பறந்து திரியும்
வானவில்
துண்டுகள்...


பூக்களில்
பட்டாம் பூச்சி
அமர்ந்தாலே
போதும்...
பூக்கத் தொடங்கிவிடும் ...
எம் மனசும்


இப்படி
பட்டாம் பூச்சிகளை
ரசிக்கிற மனசுக்கு
பட்டாம் பூச்சியே
கிடைத்துவிட்டால்....

கிடைத்து விட்டது,

அதுதான்
என்மனசு
சந்தோசக் குளத்தில்
மூழ்கிய
முத்தாகிப்போனது...

ஆம் நண்பி
ஜெஸ்வந்தி
எனக்குத்தந்த
இனிய
பட்டாம் பூச்சி
இனி
இருக்கப் போகுது
என் தளத்தில்

ஐயோ
இனி நான்
ஒவ்வொருநாளும்
கவிதைகளை
பூக்க வேணுமே
அந்த
பட்டாம் பூச்சி
தேன் குடிக்க...

எனக்கும்
பொறுப்புணர்ச்சியை
ஏற்படுத்திய
நண்பி ஜெஸ்வந்திக்கு
இனி
இந்த பட்டாம் பூச்சி
தேன் குடிக்கப்போகும்
கவிதைப் பூக்கள்
எல்லாமே
அர்ப்பணம்....

நன்றிகள் தோழி
ஜெஸ்வந்தி !

என்ன ஆச்சரியம்
அவர் தந்த
பட்டாம் பூச்சி
இப்போதே
மூன்று
குஞ்சுகளை
தந்து விட்டதே....

இந்த மூன்று
மூன்று
பட்டாம் பூச்சிகளையும்
சமர்ப்பிக்கின்றேன்
மூன்று
என்னைவிட
திறமையான
நண்பர்களுக்கு
இனி அவர்கள்
கவனித்துக் கொள்வார்கள்
அவற்றை...

அந்த நண்பர்கள்
இவர்கள் தான் .....
நண்பர் karti ந, நண்பர் சேரல் அவர்களின் தளம் தான் எனக்கு இவரை அறிமுகம் செய்துவைத்தது. நான் முதன் முதலாய் வாசித்த இவரின் கவிதை ``கத்தரிக்கோல்கள்..``
அந்த ஒரு கவிதையே இவரை இனம் காட்டிவிடும் சுயாதீனக் கவிஞ்ஞன் என்று ( அதான் உல்டா பன்னதவர் என்று). சத்தமில்லாமல் புதுமை செய்து கொண்டிருக்கும் நண்பர்.
http://karthin.blogspot.com/


அடுத்தது நண்பர் சேரல் , கருப்பு வெள்ளைக்கு சொந்தக்காரர். ஆச்சரியமாக இருந்தது இவ்வளவு நாளாக இன்னும் இந்த விருது கொடுக்கப்படவில்லையா இவருக்கு?
அவர் தளத்தில் அதற்குரிய சாட்சி இல்லை அதனால் அவசரப்பட்டுக் கொடுத்துவிட்டேன் வேறு ஒருவர் கொடுக்கும் முன்.இவரைப் பற்றி அதிகம் தேவை இல்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
http://seralathan.blogspot.com/


அடுத்தது ஆ.முத்துராமலிங்கம், நீண்ட யோசனை, இவருக்கு விருது கொடுக்கும் சக்தி எனக்கு இருக்கிறதா என்று? என்றாலும் நல்ல விடயம்தானே யார் கொடுத்தால் என்ன என்ற நம்பிக்கையில் கொடுத்து விட்டேன். வேறு தளங்களும் இவர் வைத்திருந்தாலும் நான் வாசிப்பது `பென்சில்` . இவரைப் பற்றியும் என்ன சொல்ல எல்லோருக்கும் தெரிந்தவர்தானே!
http://asuda5.blogspot.com


( நான் பிளாக்கர் பார்க்கத்தொடங்கி இரண்டே மாதம்தான், ஆகவே மேலே நான் குறிப்பிட்டவர்கள் ஏற்கனவே விருது பெற்றவர்களா என்று எனக்குத்தெரியாது. இவர்களின் நான் வழமையாக பார்க்கும் தளத்தில் பட்டாம் பூச்சி இல்லை என்பதை வைத்து கொண்டே இவர்கள் விருது பெறாதவர்கள் என்ற அனுமானத்தில் கொடுக்கிறேன்)



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்


4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்



நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!






18 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தோழரே!

விருது ஏற்படுத்துவதை விட, உங்கள் அன்பே அதிக மகிழ்வை ஏற்படுத்துகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும்

தங்களிடம் பெறும் அனைவருக்கும்

ny said...

முதலில் படித்தபோதே
பிடித்திருந்தது உங்கள் பெயர்..
என் வலைப்பூவிலும் அதை எழுதிக்கொள்ள
இடம் தந்ததற்கு நன்றி..

நீங்கள் பிடித்துத் தந்த பட்டாம்பூச்சியின் பிடியில்
- கார்த்தி. என்

வியா (Viyaa) said...

விருதுகளுக்கு எனது வாழ்த்துக்கள்

த.அகிலன் said...

:)

Unknown said...

:)

thamizhparavai said...

வாழ்த்துக்கள் மயாதி...
நீங்கள் கொடுத்தவர்களும் சரியான தேர்வுதான்...

ஆ.சுதா said...

அன்பிற்கு நெகிழ்ச்சியான நன்றி நண்பரே!

பின் வருகின்றேன் தற்போது வேலை ஆதலால்.

ஆ.சுதா said...

வணக்கம் மயாதி உங்களின் அறிமுகம் சில நாட்களே! ஆனாலும் உங்கள் ஆர்வமும் எழுத்தின் வேகமும் என்னக்குப் பிடித்த ஒன்று.
உங்கள் அன்பிற்கு என் முதல் நன்றி!
என் பழைய தளமான 'பதின்மரக்கிளை'யில் நண்பர் அன்புமணி அவர்கள் இப்பட்டாம்பூச்சியை பறக்க விட்டார்கள்! தற்போது 'பதின்மரம்' வைரஸ் வெட்டகலால் வெட்டப் பட்டு கூகில் அடுப்பில் எரிந்து விட்டது.
அதனையடுத்தே இப்பென்சிலை உருவாக்கினேன்.

எனக்கு இப்பட்டாம்பூச்சி 'விருதில்' உடன்பாடில்லை! இருப்பினும் உங்கள் அன்பிற்காக பென்சிலில் வரைந்து வைக்கின்றேன்.

கடைசியாக ஒன்று!!
//அடுத்தது ஆ.முத்துராமலிங்கம், நீண்ட யோசனை, இவருக்கு விருது கொடுக்கும் சக்தி எனக்கு இருக்கிறதா என்று?//

என்ன தகுதி வேண்டுமென நினைக்கின்றீர்கள்! அல்லது அன்னியப்பட்டுப் போகும் அளவிற்கு தகுதி என்னிடம் என்ன இருக்கின்றது?
ஒன்றும் இல்லை நண்பரே!!

இந்த தளமே (தளம்-வலைபூ) நம் தகுதியை (தகுதி என்றால் திறமையை அல்லது நம்மிடம் இருக்கும் ஒன்றை வளர்த்துக் கொள்ளவது) வளர்த்துக் கொள்ளவதற்கான ஒரு வாய்ப்புதானே அப்புறம் ஏன்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி மயாதி, அழகான பட்டாம் பூச்சிக் கவிதை. கலக்கி விட்டிருக்கிறீர்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

ஆபிரகாம் said...

வித்தியாசமான கவி்தை!

புதியவன் said...

வாழ்த்துக்கள் மயாதி...

பட்டாம்பூச்சி கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

ஒளியவன் said...

வாழ்த்துக்கள் தோழா

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் மயாதிக்கும் மற்ற மூவருக்கும்

மயாதி said...

நன்றி
ஜமால் அண்ணா
நவாஸ் அண்ணா
சென்ஷி
வியா
தேவ்
தமிழ் பறவை
பாலா
ஆபிரகாம்
புதியவன்
ஒளியவன்

மயாதி said...

பட்டாம் பூச்சியை ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கும், எனக்கு கொடுத்த நண்பி ஜெஸ்வந்திக்கும் நன்றிகள்..

நாணல் said...

வாழ்த்துக்கள்..

மயாதி said...

நன்றி நாணல்...