6.09.2009

ஆமையின் மரணம்..

இதற்கு முன் இந்த கவிதையை படித்திருக்க மாட்டீர்கள். இதை எழுதியது என்நண்பர் விஜி . எனக்கு பிடித்திருந்தது , நான் பெற்ற இன்பம் பெருக நீங்களும்...

ஆமையின் மரணம்..

ஓடு பிளந்து கிடக்கிறது
கரியசெங்குருதி பிசுபிசுக்கிறது
தலை பிதுங்கித் தெரிகிறது
கால்கள் திசையற்று பிரிந்து கிடக்கின்றன..

ஒரு ஆமை இறந்து கிடக்கிறது.

அது யாரைத் தீயிட்டது?
யாரை வஞ்சித்தது ?
யாரைபப் பழிதீர்த்தது?
யார் முதுகில் கடித்தது?

உங்கள் காலடி ஓசைகளுக்கே அது அஞ்சியதே!
உங்கள் நிழல்களே தன்னை சுடும் என்று
ஐம்புலன்களும் ஓட்டுக்குள் ஒடுக்கியதே!
பசிய புற்களை பசிதீர்க்க மென்றபோதுகூட
அது சத்தமிட்டதில்லை.

தெருக்களின் சந்துகளில்
நீங்கள் களவாடியபோது,
வன்புணர்வு கொண்டபோது,
பழிதீர்த்துகொண்டபோது,
அது தெருவைக்கூடக் கடந்ததில்லை.

பின் எதனால் அதைக் கொன்றீர்கள்?


எழுதியது - விஜி

7 comments:

S.A. நவாஸுதீன் said...

ஆனால் இப்போ படிச்சிட்டோம். நல்ல கவிதை.

coolzkarthi said...

அருமையான கவிதை நண்பரே, விஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.......

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல் மயாதி.

(ஆமா! ஆமா! இதற்கு முன் இக்கவிதையை படித்ததில்லை -

தலைப்பு பின் தானே கவிதை இருக்கு

அதனால இதற்கு பின் தான் படித்தோம்

ரமேஷ் வைத்யா said...

நன்றாக இருக்கிறது. இருவருக்கும் பாராட்டுகள்.

ny said...

xcellent one..

viji's links?!

வலசு - வேலணை said...

நன்றாய் இருக்கிறது.
ஆமை இறக்க
மனது,
இயலாமையில் இரக்கிறது

அன்புடன் அருணா said...

:))