ஒவ்வொரு விடியலிலும்
தொலைந்து போகின்றன
நிறையக் கனவுகள்..
நிஜத்தில் பேசுவதைவிட
கனவில் உளறுபவை
நிஜமாக இருக்கின்றன
சந்தோஷமான கனவுகள்
விழிக்கும் வரைதான்
சந்தோசம்
சோகமான கனவுகள்
விழித்த பின்னும்
சோகம்..
கனவுகளில் மட்டுமே
நிஜமாக
அழவும் சிரிக்கவும்
செய்கிறார்கள்
மனிதர்கள்
கனவுகளுக்கு
பலன் தேடியே
பலவீனமடைகிறார்கள்
நிறைய மனிதர்கள்
கனவுகள் பூக்கின்றன
கவிதைகள்
கனவே அடிக்கடி
வா!
உன்னோடு மட்டுமே
உரிமையோடு
பேசுகிறது
மனசு...
11 comments:
**
நிஜத்தில் பேசுவதைவிட
கனவில் உளறுபவை
நிஜமாக இருக்கின்றன**
என்கிருந்துயா பிடிக்கிறீங்க இப்டி..?
டக்ளஸ்....... said..
**
நிஜத்தில் பேசுவதைவிட
கனவில் உளறுபவை
நிஜமாக இருக்கின்றன**
என்கிருந்துயா பிடிக்கிறீங்க இப்டி..?//
வாங்க டக்லஸ்
இடுகை இட்ட உடனேயே வந்துட்டிங்க...
நன்றிகள் கோடி ! ஆனாலும் உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை நண்பரே . மன்னித்து விடுங்கள்,.
கனவு, முடியாததை முடித்து வைக்கும்..
நன்று, கவிதை!!
கலையரசன் said...
//கனவு, முடியாததை முடித்து வைக்கும்..
நன்று, கவிதை!!//
நன்றி தோழா!
உண்மையில் என் கவிதை தொடங்கியிருந்தது இப்படித்தான்,
நிஜங்களில் சாத்தியம்
இல்லையென்றாலும்
சாத்தியப்படுத்தி
விடுகின்றன...
கனவுகள்
இருந்தாலும் இந்த வரிகள் ``கனவுகள் மெய்ப்பட வேண்டும் ~` என்பதை சுட்டது போல் இருந்ததால் நீக்கிவிட்டேன்....
உங்கள் கருத்தை பார்த்து சந்தோசமாக உள்ளது . நன்றி
சந்தோஷமான கனவுகள்
விழிக்கும் வரைதான்
சந்தோசம்
சோகமான கனவுகள்
விழித்த பின்னும்
சோகம்...\\
வாழ்வின் எதார்த்தம்
சந்தோஷங்களை கனவாகவே
நினைத்து
சோகங்களில் வா(வீ)ழ்கிறோம்
கனவுகள் பூக்கின்றன
கவிதைகள்\\
இது அழகு.
நன்றி நட்புடன் ஜமால் அண்ணா
நிஜத்தில் பேசுவதைவிட
கனவில் உளறுபவை
நிஜமாக இருக்கின்றன
அடிமனத்தின் அலறல்கள் அவை. உண்மையாகத் தான் இருக்கும்
சந்தோஷமான கனவுகள்
விழிக்கும் வரைதான்
சந்தோசம்
சோகமான கனவுகள்
விழித்த பின்னும்
சோகம்..
நிஜம், அதன் பாதிப்பு மனதளவில் இருந்துகொண்டுதான் இருக்கும்
கனவுகளுக்கு
பலன் தேடியே
பலவீனமடைகிறார்கள்
நிறைய மனிதர்கள்
நிஜமான கனவு காணத் தெரியாதவர்கள்.(நிஜமான கனவு என்னன்னு நீங்க கேட்டீங்கன்னா அதுக்கு மிக அருமையான விளக்கம் உயர்திரு A.P.J. அப்துல் கலாம் அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்)
தொடந்து கலக்குங்க மயாதி
Post a Comment