பதிவை வாசிக்கும்முன்னே சொல்லி விடுகிறேன் இந்த தலைப்புக்கும் பதிவுக்கும்இரண்டு தொடர்பு. முடிஞ்சா கண்டுபிடிங்க , முடியா விட்டால் என்ன செய்ய?
நாளைக்கு சொல்கிறேன் ......
நான் மயாதி பேசுகிறேன்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
காரணம்- மன்னிக்கவும் நான் இன்னும் வாழ வேண்டும் ஆதலால் இப்போது சொல்ல முடியாது.
பிடிக்குமா-காரணம் தெரிந்தால் எனக்கு மட்டுமல்ல என் எதிரிகள் கூட இந்தப் பெயரை விரும்புவார்கள்.
************************************************************************************
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
கண்ணீர் விட்டு அழுதது ஞாபகம் இல்லை.
கண்ணீர் விடாமல் அழுதது இந்தக் கவிதை எழுதிய தினம்,
வறுமை
தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...
************************************************************************************
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சத்தியமா பிடிக்காது.
பரீட்ச்சைகளில் எவ்வளவு நேரம் மிச்சம் இருந்தாலும் விடைத்தாளை திரும்பி வாசிக்காமல் கொடுத்து விடுவேன். அவ்வளவு கேவலமான எழுத்து.
***********************************************************************************
4. பிடித்த மதிய உணவு என்ன?
பசியைப் போக்கும் எதுவும்
***********************************************************************************
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக
(என்னையே எனக்கு பிடிக்காடி கேவலமா இருக்காது?)
*************************************************************************************
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
தண்ணியில் என்றால் கடல்
தண்ணி இல்லாமல் என்றால் அருவி
**********************************************************************************
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
வார்த்தைகளை அல்லது மௌனத்தை அல்லது சிரிப்பை
************************************************************************************
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிக்காதது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
பிடிச்சது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
(ரெண்டும் ஒண்டுதான்)
*************************************************************************************
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நான் முழுமையான மனிதன்
*************************************************************************************
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கவிதை உள்ளம் கொண்டவர்களுக்கு பக்கத்தில
*************************************************************************************
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ஆள் முக்கால் ஆடை கால் ( அதாங்க கருப்பு நிற காட்ச்சட்டை மட்டும்)
************************************************************************************
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அரண் படத்தில இடம்பெற்ற `அல்லாவே எங்களின் தாய் பூமி ` பாட்டு இயர் போனில் ....
(நான் இந்து)
*************************************************************************************
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெள்ளையாக மாறி கறுப்புக் காகிதத்தில் எழுத வேண்டும்
*************************************************************************************
14. பிடித்த மணம்?
தமிழ் மணம்
*************************************************************************************
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
தமிழ்மாங்கனி
ஜெஸ்வந்தி
பெண்களை அதிகம் எழுத செய்ய வேண்டும் என்ற அக்கறைதான் ( இது காமடி அல்ல)
இவர்கள் ஏற்கனவே எழுதி விட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
*************************************************************************************
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
என்னை அழைத்த இந்த பதிவு ( ஹா ஹா ஹா )
http://naanalaay.blogspot.com/
( நன்றி நாணல்)
*************************************************************************************
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
உதைபந்து
கூடைப்பந்து
கபடி
கார்ட்ஸ்
*************************************************************************************
18. கண்ணாடி அணிபவரா?
ஆம்
*************************************************************************************
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சோகமாய் இருக்கும் போது சந்தோசிக்க வைக்கும் படம்
சந்தோசமாய் இருக்கும் போது ரசிக்க வைக்கும் படம்
*************************************************************************************
20. கடைசியாகப் பார்த்த படம்?
திருட்டு சீடியில் பார்த்ததே சட்ட விரோதம் அதை சொல்ல வேற வேண்டுமா?
*************************************************************************************
21. பிடித்த பருவ காலம் எது?
மழையின் போது வெயில் காலம்
வெயிலின் போது மழைகாலம்
*************************************************************************************
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
பழைய புத்தகக் கடையில் வாங்கிய பத்து வருடத்துக்கு முந்திய ஆனந்த விகடன்
*************************************************************************************
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
சொந்தமாக லப் டப் வாங்கி ரெண்டு மாதம்தான் , இன்னும் மாத்தவில்லை
*************************************************************************************
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடிச்சது - மழை கூரையில் விழும் சத்தம்
பிடிக்காதது- மழை வீட்டுக்குள் ஒழுகும் சத்தம்
*************************************************************************************
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அதிகபட்ச இடப்பெயர்ச்சி 350KM
அதே இடத்தை கப்பலில் , மற்றும் விமானத்தில் செல்லும் போது பல்லாயிரம் KM பயணம் செய்துள்ளேன்.
ஒரே இடத்துக்கு தரை, கடல் மற்றும் வான் மூலம் பயணிக்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும் (ஒரே நாட்டுக்குள்ளே). எல்லாம் யுத்தம் செய்த கொடுமை.
*************************************************************************************
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ரிஸ்க்கு எடுப்பது நமக்கு சும்மா ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி
*************************************************************************************
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தவறை சரியாக சுட்டிக் காட்டியும் ஒத்துக் கொள்ளாமல் இருப்பது
*************************************************************************************
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கொலை செய்து விட்டேன்
*************************************************************************************
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் அறை
*************************************************************************************
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
கால் மேல் கால் போட்டுக் கொண்டு
*************************************************************************************
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நான் சின்னப் பையன்
*************************************************************************************
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
65 ஆவது கலை .
###################################################################
சரி இந்த தலைப்புக்கும் பதிவுக்கும் இரண்டு தொடர்புகள் ஒன்று எல்லோருக்கும் தெரியும். மற்றது ?
கண்டு பிடியுங்கள்.
நவாஸ் அண்ணா சொல்லி விடாதீர்கள்!!!!
31 comments:
இத்தனை கேள்விக்குறியாய்
நீங்கள்?
(நான் உங்க வயதைச் சொல்லவில்லை மயாதி)
ஓகே. நான் உள்ளே போய் விட்டு வருகிறேன்
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
1-கண்டு பிடிச்சாச்சு 32 கேள்விகள்.
மற்றயது உங்கள் வயதெண்டால் தங்களது சுயபுராணத்தில் தங்கள் வயது 26 எண்டல்லவா கூறுகிறது... என்னவாக இருக்கும்???
(நமக்கு கொஞ்சம் intelligence கம்மி தான்!)
//வறுமை
தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...//
உண்மையிலேயே கண்களில் கண்ணீர் தான்...
//8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிக்காதது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
பிடிச்சது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
(ரெண்டும் ஒண்டுதான்)//
நீங்க திருட்டு CD(யில்) படம் பார்ப்பது மிகப் பெரிய பிழை!
//9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நான் முழுமையான மனிதன்//
இத வாசிச்சு நான் றெம்ப சிரித்தேன். ஹா... ஹா... ஹா....
மற்றும் படி பதில்கள் யாவும் அருமை!
ம்
/இந்த தலைப்புக்கும் பதிவுக்கும்இரண்டு தொடர்பு. முடிஞ்சா கண்டுபிடிங்க , முடியா விட்டால் என்ன செய்ய?
நாளைக்கு சொல்கிறேன் ......//
??????
நான் நாளைக்கு வர்றேன்!
பதில் எல்லாம் சூப்பர். விசேடமாக ' நான் முழு மனிதன்' 'பிடித்ததும் பிடிக்காததும்'.-ஒரே பதில். உமது உண்மையான பெயரைத் தெரிந்துகொள்ள ஆவல் தான் ஆனால் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு சொல்லுங்கள்.
அதுசரி இப்படி என்னை மாட்டி விட்டீரே மயாதி!
வறுமை
தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...
கவிதையை விமர்சிக்க முடியவில்லை. வலிக்கிறது
3. மருத்துவராகி இருக்கலாம்
4. நிறைவான பதில்
6. எந்தத் தண்ணி?
8. நல்லா பதில்
9. கூல்
மயாதி நூறு பதிவு போட்டாச்சா? வாழ்த்துக்கள் .
உங்கள் கேள்விக்குப் பதில் இதில் இருக்கா? நூறில அறுபத்தி எட்டு கொப்பி அடிச்சதா?
மீதி தான் சுய ஆக்கமா? இது எப்படி இருக்கு? வம்பை நீங்கதான் விலைக்கு வாங்கினீங்க.
தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...
மனதை நெகிழச்செய்த கவிதை
தண்ணியில் என்றால் கடல்
தண்ணி இல்லாமல் என்றால் அருவி
அவ்வ்வ்வ்
தண்ணியில்லாத அருவி உங்க ஊரிலா இருக்கு
பிடிக்காதது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
பிடிச்சது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
(ரெண்டும் ஒண்டுதான்)
ம்ம்ம்ம்
கொஞ்சம் குழப்பறீங்க
வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு
100-68=32 பதில்கள் தான் அந்த
100-68= நான்.......
S.A. நவாஸுதீன் said...
இத்தனை கேள்விக்குறியாய்
நீங்கள்?
(நான் உங்க வயதைச் சொல்லவில்லை மயாதி)
ஓகே. நான் உள்ளே போய் விட்டு வருகிறேன்//
பத்திரமா திரும்பி வந்தா சரிதான்..
ஹா ஹா ஹா ..
வம்பு விஜய் said...
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்//
வாங்க விஜய்
வம்பு என்றால் புதுமையா எழுதுங்க நிச்சயம் வாக்கு போடுவேன்
யாழினி said...
//8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிக்காதது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
பிடிச்சது- பிழையானதை சட்டென்று ம திட்டு a.
(ரெண்டும் ஒண்டுதான்)//
நீங்க திருட்டு CD(யில்) படம் பார்ப்பது மிகப் பெரிய பிழை!//
வாங்க யாழினி ....
என்ன செய்றது ஒரிஜினல் படம் வரும்வரை பொறுமை இல்லையே?
யாழினி said...
1-கண்டு பிடிச்சாச்சு 32 கேள்விகள்.
மற்றயது உங்கள் வயதெண்டால் தங்களது சுயபுராணத்தில் தங்கள் வயது 26 எண்டல்லவா கூறுகிறது... என்னவாக இருக்கும்???
(நமக்கு கொஞ்சம் intelligence கம்மி தான்!)//
நமக்கு கொஞ்சம் intelligence கம்மி தான்!)
இதுல நமக்கு எண்டு உங்களை மட்டும்தானே சொல்கிறீர்கள்....
ஒத்துக் கொள்கிறேன்..
ஹா ஹா ஹா...
யாழினி said...
//வறுமை
தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...//
உண்மையிலேயே கண்களில் கண்ணீர் தான்...//
சி சீ சீ இது என்ன சின்னப்புள்ள தனமா அழுது கொண்டு ..
துடைச்சுக் கொள்ளுங்கள் தோழி !
பெண்கள் அழுதால் அதுவும் என்னால் அழுதால் தாங்காது மனசு
அவ்வளவு நல்ல பையன்
( இப்புடிச் சூடு)
சும்மா டமாஷு கோபிச்சுக்காதம்மா...
யாழினி said...
//9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நான் முழுமையான மனிதன்//
இத வாசிச்சு நான் றெம்ப சிரித்தேன். ஹா... ஹா... ஹா....
மற்றும் படி பதில்கள் யாவும் அருமை!//
சிரிக்க தொடங்கியாச்சா .. நல்ல பிள்ளை
நன்றி
சென்ஷி said...
ம்
/இந்த தலைப்புக்கும் பதிவுக்கும்இரண்டு தொடர்பு. முடிஞ்சா கண்டுபிடிங்க , முடியா விட்டால் என்ன செய்ய?
நாளைக்கு சொல்கிறேன் ......//
??????
நான் நாளைக்கு வர்றேன்!//
தல நீங்களே ஜெகா வாங்கினா ?
நீங்கதானே அறிவுத் தாத்தா !
ஹா ஹா ....
ஜெஸ்வந்தி said...
பதில் எல்லாம் சூப்பர். விசேடமாக ' நான் முழு மனிதன்' 'பிடித்ததும் பிடிக்காததும்'.-ஒரே பதில். உமது உண்மையான பெயரைத் தெரிந்துகொள்ள ஆவல் தான் ஆனால் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு சொல்லுங்கள்.
அதுசரி இப்படி என்னை மாட்டி விட்டீரே மயாதி!//
யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்...
அவ்வளவு காலம் தேவையில்ல , வேண்டுமென்றால் ஒரு மெயில் அட்ரஸ் எனக்கு அனுப்பி விடுங்கள் நான் அந்த ரகசியத்தை சொல்லி விடுகிறேன்...
u can get my adress on my profile
S.A. நவாஸுதீன் said...
4. நிறைவான பதில்
6. எந்தத் தண்ணி?
8. நல்லா பதில்
9. கூல்//
நன்றி அண்ணா
S.A. நவாஸுதீன் said...
3. மருத்துவராகி இருக்கலாம்//
ஐயோ அண்ணா நான் உண்மையிலே மருத்துவராக்கும்...
தெரியாதா?
ஜெஸ்வந்தி said...
மயாதி நூறு பதிவு போட்டாச்சா? வாழ்த்துக்கள் .
உங்கள் கேள்விக்குப் பதில் இதில் இருக்கா? நூறில அறுபத்தி எட்டு கொப்பி அடிச்சதா?
மீதி தான் சுய ஆக்கமா? இது எப்படி இருக்கு? வம்பை நீங்கதான் விலைக்கு வாங்கினீங்க.//
எனக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை...
வாழ்த்துக்கள் பதில் கண்டு பிடிச்சத்துக்கு
sakthi said...
தண்ணியில் என்றால் கடல்
தண்ணி இல்லாமல் என்றால் அருவி
அவ்வ்வ்வ்
தண்ணியில்லாத அருவி உங்க ஊரிலா இருக்கு //
பேக்கு பேக்கு .....
sakthi said...
பிடிக்காதது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
பிடிச்சது- பிழையானதை சட்டென்று சுட்டிக்காட்டி திட்டு வாங்குவது.
(ரெண்டும் ஒண்டுதான்)
ம்ம்ம்ம்
கொஞ்சம் குழப்பறீங்க//
குலம்பீட்டிங்கள ....
அதைத்தான் எதிர் பாரத்தேன்
இது எப்புடி? ஹா ஹா ...
நன்றி...
தமிழரசி said...
வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு
100-68=32 பதில்கள் தான் அந்த
100-68= நான்.......//
கெட்டிக்கார அக்கா!
பிறகு தம்பிட மூலையில கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?
நன்றி அக்கா
32ம் 32 விதம்!!!!
Post a Comment