6.17.2009

இடுகை இல. 01 +101

என்னடா வித்தியாசமான தலைப்பா இருக்கே என்று உள்ளே வந்தவர்கள் மன்னிக்கவும்! தலைப்புக்கும் கவிதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனாலும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கு. என் முதல் இடுகை இங்கே இருக்கும் முதல் கவிதை, இடுகை ஒன்றாக இருந்த அதே கவிதையே இடுகை நூற்றி ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் விளைந்ததுதான் இந்த பதிவு. இருந்தாலும் உங்களை ஏமாற்ற மனம் இல்லாததால் இன்னும் சில கவிதைகளை அதே தலைப்பில் இடுகிறேன்.
வந்துட்டிங்க ! உங்கட தலை விதி ..........

புத்தாடை





பிச்சைக்காரனுக்கு
சந்தோசம் ...
கிடைத்துவிட்டது
யாரோ
கழட்டிப்போட்ட
கிழிந்தசட்டை ...



புத்தாடை

புதுவருடத்தில்
புதிய ஆடை
அணிந்துகொண்டும்
அதே ...
பழைய மனிதன்



புத்தாடை

கோயிலுக்குப்
போய்
வந்தவுடனேயே
பத்திரமாய்
கழற்றி மடித்து
வைத்தாள்
ஆடையை ....
அடுத்த
புதுவருடத்திற்கும்
உடுத்த
வேணும்...


புத்தாடை




புது உடுப்பு
வாங்கி
வந்தவுடன்
மடித்து
வைக்கப்படுகின்றன
பிள்ளையின்
பழைய ஆடை.....

வேலைக்காரப்
பையன் இன்னும்
வெறும் மேனியுடன்!


புத்தாடை





நீ உடுக்கும்
ஒவ்வொரு
தடவையும்
புத்தாடையாகிப்
போகிறது
உன் பழைய
ஆடைகளும்...


நீ புத்தாடை
அணியும்
நாட்களில்
எல்லாம்
காலம் தன்னை
புதுப்பித்துக்
கொள்கிறது...



10 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நூறுக்கு வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ உடுக்கும்
ஒவ்வொரு
தடவையும்
புத்தாடையாகிப்
போகிறது
உன் பழைய
ஆடைகளும்...//

நல்ல வர்ணிப்பு வரிகள்

செஞ்சுரியடித்ததுக்கு வாழ்த்துக்கள்

மயாதி பேட்டிங் 101* நாட் அவுட்

மயாதி said...

சேரல் said...

நூறுக்கு வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்//

நன்றி நண்பரே

மயாதி said...

//நீ உடுக்கும்
ஒவ்வொரு
தடவையும்
பிரியமுடன்.........வசந்த் said...

//நீ உடுக்கும்
புத்தாடையாகிப்
போகிறது
உன் பழைய
ஆடைகளும்...//

நல்ல வர்ணிப்பு வரிகள்

செஞ்சுரியடித்ததுக்கு வாழ்த்துக்கள்

மயாதி பேட்டிங் 101* நாட் அவுட் //

நன்றி வசந்த்

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே//

நன்றி அண்ணா !

Anonymous said...

வாழ்த்துக்கள்.....முதல் கவிதை முத்தாய்ப்புப்பா...

ஒரு நாளைக்கு இத்தனை எழுதினால் நான் பேசாமல் அங்க வந்திடுவேன்..பின்னே எனக்கு இங்கென்ன வேலை....மேலும் செழிக்க சிறக்க வாழ்த்துக்கள்....

சென்ஷி said...

எல்லாமே அசத்தல் ரகம்..

இன்னும் நிறைய்ய செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

புதுவருடத்தில்
புதிய ஆடை
அணிந்துகொண்டும்
அதே ...
பழைய மனிதன்

சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

நீ உடுக்கும்
ஒவ்வொரு
தடவையும்
புத்தாடையாகிப்
போகிறது
உன் பழைய
ஆடைகளும்...

நல்லா இருக்கு

thamizhparavai said...

எல்லாக் கவிதையும் நல்லாஇருந்தாலும் கடைசிதான் சிக்ஸர்...
காவ்யாவின் படமும் அழகு...