5.30.2009

வீதியோரம்


இறுக்கமாய்
அணைத்தபடி
தூங்கிக்கொண்டிருந்தாள்
தன் குழந்தைகளை...
அவள் அணைப்பில்
அந்த குழந்தைகளை
பார்த்தபோது
புரிந்தது !
வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...


அழுக்காய் இருந்தாலும்
அவளையும்
சில பேர்
பார்த்துவிட்டுத்தான்
போகிறார்கள்...
நிச்சயமாய்
பரிதாபமாயல்ல!
அழுக்கு படிந்த
அவள் ஆடையில்
அங்கங்கே
கிழிசல்கள் ...

8 comments:

S.A. நவாஸுதீன் said...

வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...

அருமை மயாதி

S.A. நவாஸுதீன் said...

அழுக்கு படிந்த
அவள் ஆடையில்
அங்கங்கே
கிழிஞ்சல்கள்...

அழுக்கு அவள் ஆடையில் அல்ல. அதைப் பார்க்கும் அசுத்தம் நிறைந்த கண்களில்.
நல்லா இருக்கு மயாதி

ப்ரியமுடன் வசந்த் said...

//அவள் அணைப்பில்
அந்த குழந்தைகளை
பார்த்தபோது
புரிந்தது !
வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...//


தாய்வீடு
நமக்கு இப்பிடியெல்லாம் தோண மாட்டேன்னுதே...

thamizhparavai said...

நன்று...
அது கிழிஞ்சல்கள் இல்லை...
கிழிசல்கள் என்பது என் எண்ணம்...

மயாதி said...

நன்றி வசந்த் ...

மயாதி said...

உண்மையில் எது சரி என்று எனக்கு தெரியாமல்தான் கிளிஞ்சல் என பிரதியிட்டேன்..

தவறை காட்டியதற்கு நன்றி.
இப்போது திருத்திவிட்டேன்.

Sukumar said...

எளிமையான நடையில் வலிமையாக கருத்து சொல்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....

மயாதி said...

thanks sukumar