5.25.2009

ஜதீகம்

திருமண வீட்டில்
மறைவாகத்தான்
நிற்கசொல்கிறார்கள்
விதவையாம்...

இப்படித்தான்
அவள் திருமணமும்...
விதவைகள்
மறைந்து நிற்க
சுமங்களிகள்தான்
நடத்தி வைத்தார்கள்!

8 comments:

தாமிரபரணி said...

செருப்பால் அடிச்ச மாதிரி சொன்னிங்க, என்னைக்குதான் இந்த நாய்களுக்கு புரியபோதோ, புனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லைனு நினைக்கும் மடையர்களின் மேல் கோபம் வந்தாலும் ஓரளவு சகித்து கொள்ளலாம். ஆனால் விதவை எனபள் நம் தாய்யை போல், தம் கூட பிறந்த அக்கா, தங்ககை போல் அவளும் பெண்தான். அவள் கணவன் இறந்தது எனபது விதி
இதற்கு எப்படி அவள் காரணமாகயிருக்க முடியும், சாவு எனபது தவறு என்றால் அவனையும் அவளையும் படைத்த கடவுளை தண்டிக்க வேண்டும் அவனை ஒதுக்க வேண்டும், இவர்கள் கல்யாணத்தை நடத்தி வைத்த பொது மக்களை தண்டிக்க வேண்டும்

goma said...

நெத்தியடி .
எப்படி அடித்தாலும் நாங்கள் இப்படித்தான் என்று எப்படித்தான் இருக்க முடிகிறதோ?..
நாலே வார்த்தையில் நலாச் சொன்னீங்க.வாழ்த்துக்கள்.வளரட்டும் உங்கள் சமூகநலப் பார்வைகள்.

மயாதி said...

என்ன செய்வது நம் சமுகத்தின் தலை விதி இது ...

கருத்துக்கு நன்றிகள் நண்பர்களே

தமிழரசி said...

இன்றைய கால கட்டத்தில் இவை குறைவே...இருப்பினும் இருக்கத்தான் செய்கிறது...

மயாதி said...

ஐயோ ! என்னதான் நாம் வழர்ந்துவிட்டதாக காட்டினாலும் இன்னும் நிறைய இருக்கின்றன....
நீங்கள் போகின்ற திருமண வீடுகளில் பாருங்கள் !
மறைமுகமாக நடந்துகொண்டேயிருக்கின்றன ...

சூரியன் said...

நச்சுனு இருக்குபா ...
ஆனா நம்மாளுக என்னைக்குதான் திருந்த போகுதுகனு தெரியல ...

மயாதி said...

thanks sooriyan

Joe said...

சுமங்கலிகள்