5.26.2009
உன் வீதி
உன் வீடு
இருக்கும் வீதி
என் வீடு
உன் வீதியில்தான்
வீழ்ந்து கிடக்கிறது
என் விதி
உன் வீதியில்
பயணிக்கும்
ஒவ்வொரு பயணமும்
உல்லாசப்பயணம்
நீ
நடந்துபோகும்
வீதிக்கும்
உயிர் வந்துவிடுகிறது...
மூச்சு விடுகின்றன
உன்
சுவடுகள்
உன் வீதியில்
தார்
போடச்சொல்லி
யாரும் கேட்கவில்லை
கிரவல் மண்ணில்தான்
தெளிவாக தெரியும்
உன் சுவடுகள்
உன் வீதிக்கு
பெயர் கூட
இல்லை
ஆனால் புகழ்
நிறைய...
ஊரடங்குச்சட்டம்
போட்டாலும்
இயங்கிக்கொண்டிருக்கும்
உன் வீதி
மட்டும்
இப்படி
நீ தனியாக
போகும்போது
இருந்த
அத்தனை
சிறப்பும்
நீ கணவனோடு
போகும் போதும்
இருக்கத்தான்
செய்கிறது...
இருந்தாலும்
மனசு
இல்லை
ரசிப்பதற்கு
தயவுசெய்து
என் இறுதி
ஊர்வலத்தை
அவள் வீதியில்
மட்டும்
கொண்டுபோய்
விடாதீர்கள்...
மீண்டும்
உயிர் பெற
இஷ்டம் இல்லை
எனக்கு....
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
arumai
தயவுசெய்து
என் இறுதி
ஊர்வலத்தை
அவள் வீதியில்
மட்டும்
கொண்டுபோய்
விடாதீர்கள்...
மீண்டும்
உயிர் பெற
இஷ்டம் இல்லை
எனக்கு....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பி....
அட... எவ்வளவோ சொல்லி முடித்த பின்னும், இந்தக் காதலிடம் மட்டும் இன்னும் நிறைய தோன்றிக்கொண்டே இருக்கிறது, சொல்வதற்கு, உணர்வதற்கு.
-ப்ரியமுடன்
சேரல்
பேசுங்கள் சேரல் பேசுங்கள்,
காதலை மட்டும்தான் தடையில்லாமல் பேசமுடிகிறது நம்மால் பேசுங்கள்..
வருகைக்கு நன்றி நண்பா !
//ஊரடங்குச்சட்டம்
போட்டாலும்
இயங்கிக்கொண்டிருக்கும்
உன் வீதி
மட்டும்//
ரசனை
யாருங்க அது?
இப்படி மாட்டி விடப் பார்க்கிறீங்களே வசந்த்...
மிக(ச்)சிறப்பா சொல்லியிருக்கீங்க
அதுலையும்
மீண்டும் உயிர் பெறும் விடயம் மிகவும் இரசித்தேன்
காதலும் காதலிக்கும் கவிதை வரிகள்.
தயவுசெய்து
என் இறுதி
ஊர்வலத்தை
அவள் வீதியில்
மட்டும்
கொண்டுபோய்
விடாதீர்கள்...
மீண்டும்
உயிர் பெற
இஷ்டம் இல்லை
எனக்கு....
இவ்ளோ நாளா உங்க பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு மயாதி.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே....
மீண்டும் ச(சி)ந்திப்போம் !
உங்களைப் போல நண்பர்களை நானும் இவ்வளவுகாலம் மிஸ் பண்ணியிருப்பது எனக்கும் கவலைதான் நண்பர்களே...
Post a Comment