5.17.2009

என் கிறுக்கல்கள்

கோயில்களிலும்
கொள்ளை போகின்றன
சாமி(கள்)!
விக்கிரகங்கள் ....

ஒழுங்கு
ஓன்றன் பின் ஒன்றாக
நிறையப் பயணிககலாம்
ஒற்றையடிப்பாதையில்

புனிதம்
பாவத்தை சுமப்பவர் மட்டுமல்ல
காதலைச்சுமப்பவர்களும்
உயிர்த்தெழலாம்
நிஜம்
ஒவ்வொரு பண்டிகையிலும்
மிஞ்சுகிறது
புத்தாடையும் அதற்கு -
வாங்கிய கடனும்

தேவதை
நீ தேவாரம் பாடும் போது
உயிர்த்தெழுகிறது
சாமி சிலை
யுத்தம்
வெற்றியை கொண்டாடும்
ஒவ்வொரு பட்டாசு சத்தத்திலும்
ஒளிந்து போகிறது
நிறைய ஒப்பாரிகள்

ஆருடம்
பொருத்தமாகத்தான் இருக்கிறது
விவாகரத்துப் பெறுபவர்களின்
ஜாதகமும்

மூடம்
செவ்வாய்க் கிரகம்
சென்றாலும் தீராது
செவ்வாய் தோஷம்

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

எல்லாம் அழகு. என்னைக் கவர்ந்தவை

//நிஜம்
ஒவ்வொரு பண்டிகையிலும்
மிஞ்சுகிறது
புத்தாடையும் அதற்கு -
வாங்கிய கடனும்
//

//ஆருடம்
பொருத்தமாகத்தான் இருக்கிறது
விவாகரத்துப் பெறுபவர்களின்
ஜாதகமும்//

-ப்ரியமுடன்
சேரல்

மயாதி said...

நன்றி நண்பா
வருகைக்கு !

Anonymous said...

கவிதை கூறும் கருத்துக்கள் நன்ன்றாக இருக்கின்றன. ஆனால், ஹைக்கூ என்று சொல்லமுடியவில்லை. அதற்கான விதிமுறைகள் இல்லை.

மூன்று வரிதான் (5+7+5)
நடு வரி சற்று நீளமாக இருக்கலாம்.

புதல் வரியைப் படித்ததுடன் மனதில் ஒரு புகைபடம் போல ஒரு காட்சி வரவேண்டும். இரண்டாவது வரி முதல் வரிக்கு தொடர்புடையதாக ஆனால் தொடர்ச்சியான வாக்கியமாக வரக்கூடாது. மூன்றாவது வரி பளாரென்று முதல் வரி சொல்லும் படத்துக்குண்டான கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்த வேண்டும்.

மூன்று வரிகளையும் தொடர்ந்து படிப்பது போல் இருக்கக்கூடாது.

உவமை, விடுகதை போல் இருக்கக்கூடாது.

உங்களை குறை கூறுவதாக எடுத்துகொள்ளாதீர்கள். நீங்கள் இன்னும் நல்ல முறையில் எழுதவே விரும்புகிறேன்.

thamizhparavai said...

எனது சாய்ஸ் ‘ஆரூடம்’தான்...நச்...