5.03.2009

சந்தோசமான இரங்கற்பா

குளிர்
காய்ந்துகொண்டிருந்தது
குழந்தை...
அம்மாவின்
மார்புச்சூட்டில்
அம்மாவோ
நனைந்துகொண்டிருந்தாள்
மழையில்....
ஒரு
மரம்
தன்னால்
முடிந்தவரை
காப்பாற்றிகொண்டிருந்தது
இருவரையும்...

எரிவாயுக்குண்டிலும்
எரிந்து
போகாத
வீர...
மரம்
அது!!

எங்கேயோ
ஒருவன்
தீக்குளித்துச்
செத்துப்போனான்!

இருவரையும்
காப்பாற்றச்சொல்லி
அவன் எழுதிய..
மனுவை
வாசித்து
முடித்த
அமைச்சர்
அவசர
அவசரமாய் ...
எழுதத்தொடங்கினார்
ஒரு
இரங்கற்பா???
அப்பாடா!
இதை
வைத்தே
அடுதத..
தேர்தலை
வென்றுவிடலாம்!

சந்தோஷமாய்
பிரசுரிக்கப்படடது
ஒரு
இரங்கற்பா!

4 comments:

sakthi said...

யப்பா எத்தனை கவிதையப்பா ஒரு நாளைக்குள்

cheena (சீனா) said...

அருமை அருமை - சிந்தனை அருமை
இரங்கற்பா பிரசுரிப்பதிலும் ஒரு மகிழ்ச்சிஇயல்பு தானே - அது இரங்கற்பாவாயினும் அதுவும் ஒரு கவிதைப் பிரசவம் தானே

மயாதி said...

sakthi said...

// யப்பா எத்தனை கவிதையப்பா ஒரு நாளைக்குல் //

என்னப்ப செய்றது , இதெல்லாம் பார்த்து m மட்டும் தானே எழுத முடியும நம்மால.
இது நான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் பிரதியிட்ட கவிதை..
இப்போதும் கருத்துச் சொல்லும் உங்களுக்கு என்ன மனசப்பா?

மயாதி said...

cheena (சீனா) said...

//அருமை அருமை - சிந்தனை அருமை
இரங்கற்பா பிரசுரிப்பதிலும் ஒரு மகிழ்ச்சிஇயல்பு தானே - அது இரங்கற்பாவாயினும் அதுவும் ஒரு கவிதைப் பிரசவம் தானே //



அதெல்லாம் சீனா குடுத்த குண்டுதானே....
ஐயோ நான் உங்களை சொல்லல சீனா நாட்டைச்சொன்னேன்.

நன்றி தோழி..