10.11.2010

மிட்டாய் விற்கும் சிறுவன்

மிட்டாய்
விற்கும்
சிறுவனுக்குப்
பாவப்பட்டு
ஒருமிட்டாய்
வாங்கி
அவனுக்கே
கொடுத்துவிட்டு
வந்தேன்
இப்போது
அவன் அதை
சாப்பிட்டுக்கொண்டிருப்பானா
விற்றுக் கொண்டிருப்பானா ?

....................................................................

மிட்டாய் விற்கும்
சிறுவனுக்கு
பள்ளிக்குப்போகாமல்
மிட்டாய் விற்பது
தப்பு என்று
அறிவுரைகூறும்
சிலருக்கு
அவனிடம்
ஒரு மிட்டாய்யேனும்
வாங்கும்
மனசில்லை

....................................................

மிட்டாய் விற்கும்
சிறுவர்களைப்பார்த்து
சின்னவயசில்
பொறாமைப்பட்டு
இருக்கிறேன்
இவர்களிடம்
இவ்வளவு
மிட்டாய்கள்
இருக்கிறதே என்று..
எவ்வளவு
சின்ன
பிள்ளைத்தனமாய்
இருந்திருக்கிறேன்

................................................

ஏனப்பா இந்த
வயதில்
மிட்டாய்
விற்கிறாய்
அப்பா அம்மா
இல்லையா என்று
கேட்டேன்
அவங்க
பெரியாளா ஆகிட்டாங்க
மிட்டாய் யெல்லாம்
விற்கமுடியாது
சார் என்றுவிட்டு
போனான்
என்ன ஒரு
வியாபார யுக்தி!

............................................
மிட்டாய்
விற்கிறாயே
பள்ளிக்குப்
போறதில்லையா
என்றேன்..
போகணும் சார்
இடைவேளையிலதான்
பிசினஸ் போகும்
அதுக்கு
இன்னும் நேரம்
இருக்கு சார்
என்றுவிட்டுப்
போனான் .

3 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக யதார்த்தமான அழகான கவிதை!
தொடருங்கள்..

மயாதி said...

kutipaiya said...
மிக யதார்த்தமான அழகான கவிதை!
தொடருங்கள்..
//

நன்றி

நிலாமதி said...

இடை வேளையில் தான் பிஸ்னெஸ் போகும்...........அதற்கு நேரம் இருக்கிறது. கல்வியும் நடக்கிறது மிட்டாயும் விலை போகிறது .
பிழைத்துக் கொள்வான்.