10.14.2010

பேய் எழுதிய காதல் கவிதை !

காதல் தோல்வியில்
செத்துப்
போனவனின் ஆவி
ஆத்மா சாந்தியடையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது
காதலியின்
ஆவிக்காக
அவள்
சாகும் வரை....

.....................................................
உயிரோடு
இருக்கும்போது
யாரோ ஒருவனைப்
பார்ப்பதுபோலாவது
பார்ப்பாய்
இப்போது
அப்படியும்
பார்க்கிறாயில்லை
நான் சாகாமலேயே
இருந்திருக்கலாமோ?


..................................................
மீண்டும்
பிறக்கச்
சொல்கிறார்கள்
முடியாது...
நீ இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கும்
பூமியில்
உனக்குச் சின்னவனாய்
என்னால்
பிறக்க முடியாது...

..................................................

உயிரோடு
இருக்கும்போது
உன்னை எண்ணி
சாகவாவது
முடிந்தது
இப்போது
என்ன செய்வேன்?

11 comments:

Anonymous said...

போதும் முடியலை....

மயாதி said...

தமிழரசி said...
போதும் முடியலை..//அவ்வளவு கொடுமையாகவா இருக்கு அக்கா?

sakthi said...

மயாதி said...
தமிழரசி said...
போதும் முடியலை..//அவ்வளவு கொடுமையாகவா இருக்கு அக்கா

இதை சொல்ல வேற வேணுமா மயாதி

ஜெஸ்வந்தி said...

Super Mayaathi. I enjoyed reading them.

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

sakthi said...
மயாதி said...
தமிழரசி said...
போதும் முடியலை..//அவ்வளவு கொடுமையாகவா இருக்கு அக்கா

இதை சொல்ல வேற வேணுமா மயாதி//என்ன பொண்ணுங்கள் எல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க ? முடியல சாமி நான் எஸ்கேப் ..

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
Super Mayaathi. I enjoyed reading them.
//
நன்றி நீங்களாவது இப்படி ஒரு வார்த்தை சொன்னீங்களே ஜெஸ் மா ...!

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்பு படிக்கிறப்போ எதாவது ஒரு டாக்டர பார்த்து பேசி முடிச்சுருக்கலாம்ல!

Hari S said...

Hey the poem was good, kep posting kep rocking,

HARI S,
thesuccessor.com

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
மாப்பு படிக்கிறப்போ எதாவது ஒரு டாக்டர பார்த்து பேசி முடிச்சுருக்கலாம்ல!
//
மாட்டி விடுறதில என்ன ஒரு சந்தொஷமையா உனக்கு ?

மயாதி said...

Hari S said...
Hey the poem was good, kep posting kep rocking,

HARI S,
thesuccessor.com

//

நன்றி ஹரி