10.19.2010

கவிதைகளின் காதலி

எல்லோருக்கும்
அழகை
வர்ணிக்க
கவிதை
தேவைப்படும்
எனக்கு மட்டும்
கவிதையை
வர்ணிக்க
நீ தேவைப்படுகிறாய்.....


என்
கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ...


முத்தங்களுக்கான
என் தேவையை
குறைத்துவிடுகிறாய்
கவிதைகள் மூலம் ...


நீ
தூரம்போகும்
போதுதான்
என் கவிதைகள்
நிரம்புவதற்கு
நிறைய இடம்
கிடைக்கிறது

நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

பொறாமைப்பட்டுக்
கொள்கிறேன்
நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


சொல்லிவிடு
நான்
உன் காதலனா
கவிஞனா?

21 comments:

Anonymous said...

good post keep on going

sakthi said...

நீ என் காதலியா
கவிதைகளின்காதலியா?

பதில் சொல்லிட்டு போம்மா
நல்லா இருக்கு பா

மயாதி said...

sakthi said...
நீ என் காதலியா
கவிதைகளின்காதலியா?

பதில் சொல்லிட்டு போம்மா
நல்லா இருக்கு பா
//

நன்றி

Anonymous said...

நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

இது தான் காதலா? நைஸ்

மயாதி said...

தமிழரசி said...
நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

இது தான் காதலா? நைஸ்
//

நன்றி அக்கா

R.பூபாலன் said...

காதலிகளை வர்ணித்து கவிதை எழுதுபவர்கள்தான் நிறைய பேர் இருக்கின்றார்களோ..

ஏன் காதலர்களை வர்ணித்து எந்த காதலியும் கவிதை எழுதுவது இல்லை....

(ஒருவேளை....
எனக்குதான்
தெரியலியோ.....)

நாணல் said...

நல்லா இருக்கே...

/நீ என் காதலியா
கவிதைகளின்காதலியா?/

யாருமா அங்க, தம்பிக்கு பதில் சொல்லிட்டு போங்க... ;)

மயாதி said...

R.பூபாலன் said...
காதலிகளை வர்ணித்து கவிதை எழுதுபவர்கள்தான் நிறைய பேர் இருக்கின்றார்களோ..

ஏன் காதலர்களை வர்ணித்து எந்த காதலியும் கவிதை எழுதுவது இல்லை....

(ஒருவேளை....
எனக்குதான்
தெரியலியோ.....//ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீங்க?

நன்றி பூபாலன்

மயாதி said...

நாணல் said...
நல்லா இருக்கே...

/நீ என் காதலியா
கவிதைகளின்காதலியா?/

யாருமா அங்க, தம்பிக்கு பதில் சொல்லிட்டு போங்க... ;)//முடியல ...

நன்றி நாணல்

Kousalya said...

ஒரு கவிதையை படிக்கும் போது அந்த வரிகள் நம் மனதை சட்டென்று ஈர்க்க வேண்டும்...அதை சரியாக செய்கிறது உங்கள் கவிதைகள்...

வாழ்த்துக்கள் சகோ.....!

தியாவின் பேனா said...

ஆகா ரொம்ப பிடிச்சிருக்கு

பூங்குழலி said...

நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


அழகாகவும் இயல்பாகவும் இருக்கிறது கவிதை

மயாதி said...

Kousalya said...
ஒரு கவிதையை படிக்கும் போது அந்த வரிகள் நம் மனதை சட்டென்று ஈர்க்க வேண்டும்...அதை சரியாக செய்கிறது உங்கள் கவிதைகள்...

வாழ்த்துக்கள் சகோ.....//நன்றி சகோதரி

மயாதி said...

தியாவின் பேனா said...
ஆகா ரொம்ப பிடிச்சிருக்கு

//

நன்றி தியா

மயாதி said...

பூங்குழலி said...
நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


அழகாகவும் இயல்பாகவும் இருக்கிறது //நன்றி பூங்குழலி

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ.

அசத்துடா மாப்ள!

vinu said...

போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


nalaakeeethupaaaa

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ.

அசத்துடா மாப்ள!//நன்றிடா நண்பா ..

மயாதி said...

vinu said...
போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


நலாகேஎதுபாஆ//நன்றி வினு

சௌந்தர் said...

சொல்லிவிடு
நான்
உன் காதலனா
கவிஞனா?////

காதல் கவிஞ்ஜன் நீ

jaisankar jaganathan said...

அருமையான கவிதை