10.29.2010

மழையின் சில்மிஷங்கள்

மழை
எல்லோரையும்
நனைக்கும்
உன்னை மட்டும்
அபிஷேகம்
பண்ணுகிறது...

உன்னில்
விழுந்த
மழைத்துளி
கலந்தபோது
புனிதமானது
சாக்கடை

நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை

மழை
மண்ணில் விழுந்தால்
மண் வாசம்
உன்னில் விழுந்தால்
உன்வாசம்

உன்னில்
விழும்போது
ஆணாகிப் போகிறது
மழை...

உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை...

உன்னில்
மழைவிழுகையில்
நீ வெட்கப்படுவதில்
புரிந்துவிட்டது
மழைக்கும்
இருக்கிறது
என் கை..

4 comments:

sakthi said...

உன் மேக்கப் எல்லாம்கலைத்து விட்டாலும்உன் அழகைக்கொஞ்சம் கூடக்குறைத்துவிடுவதில்லைமழை...

மழை கவிதை அருமைப்பா மயாதி

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை
//

எல்லாமே அசத்தல் மயாதி எனக்கு இந்த கவிதை மிகப்பிடித்தது கற்பனை செய்து பார்ப்பவர்களுக்கே விளங்கும் அழகான கற்பனை! தொடர்ந்து அசத்து மாப்பு!

மயாதி said...

sakthi said...
உன் மேக்கப் எல்லாம்கலைத்து விட்டாலும்உன் அழகைக்கொஞ்சம் கூடக்குறைத்துவிடுவதில்லைமழை...

மழை கவிதை அருமைப்பா மயாதி//நன்றி sakthi

//நன்றி மாப்பு