10.15.2010

சொல்வதெல்லாம் காதல் ...

என்னை
பீடித்துக்கொண்டவள்
நீயே
பிடிக்கவில்லை
என்கிறாய்...

................................................

கடவுள்
மனிதனாக
அவதாரம்
எடுப்பார்
தேவதைகள்
நீயாக
அவதாரம்
எடுக்கும்...

.........................................
பேசாமல் இருப்பதில்
என்ன இருக்கிறது
என்றேன்
எல்லாமே
இருக்கிறது
என்றது
உன் மௌனம்...

...........................................

யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
ஒருவனாகிப்
போவேன் நான்

............................................

நீ
காதலிக்காவிட்டாலும்
பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே
காதலித்து
விடுகின்றேன்..

.............................................

6 comments:

Anonymous said...

யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
ஒருவனாகிப்
போவேன் நான்

இது மனதை வருத்துகிறது
தம்பி நலமா?

மயாதி said...

நன்றி அக்கா !
நான் நலம் .நீங்கள் ?

அன்புடன் மலிக்கா said...

மயாதி உங்கள் கவிதைகள் அருமை. தொடரட்டும் கவிப்பணி..

http://niroodai.blogspot.com/

ஸ்ரீ said...

அருமை.மிக நல்ல பதிவு.

மயாதி said...

அன்புடன் மலிக்கா said...
மயாதி உங்கள் கவிதைகள் அருமை. தொடரட்டும் கவிப்பணி..

http://niroodai.blogspot.கம//

நன்றி மலிக்கா

மயாதி said...

ஸ்ரீ said...
அருமை.மிக நல்ல பதிவு.//நன்றி ஸ்ரீ