11.01.2010

ம் ....


நீ
பேசாமல் போனாய்
புரிந்துகொண்டேன்
பேசிவிட்டுப் போனாய்
குழம்பிப் போனேன்


எல்லோருக்கும்
பேசுவதற்கு ஒரு
மொழி தேவைப்படும்
உனக்கு மட்டும்
பேசாமல்
இருப்பதற்கு
ஒரு மொழி
தேவைப்படுகிறது...


உன்னிடமிருந்து
ஏதாவது
தவறி விழும்
போதெல்லாம்
ஒரு கவிதை
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது...

நீயே
தவறிவிழும்
போது...
என் மனது
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது

உன்னோடு
வாழ்வதற்கான
இறுதி முயற்சி
மரணம்

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னிடமிருந்து
ஏதாவது
தவறி விழும்
போதெல்லாம்
ஒரு கவிதை
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது...

நீயே
தவறிவிழும்
போது...
என் மனது
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது
//

இரண்டுமே மேட் ஃபார் ஈச் அதர்

சூப்பர்ப்!

முகமூடியணிந்த பேனா!! said...

ஒப்பீடு நடை மிக நளினமாய் அமைந்திருக்கிறது.

மயாதி said...

நன்றி வசந்த்

மயாதி said...

முகமூடியணிந்த பேனா!! said...
ஒப்பீடு நடை மிக நளினமாய் அமைந்திருக்கிறது//நன்றி நண்பா