1.31.2010

காற்றுக்குத் தீனி

உன் எழுத்துப்
பிழைகளை
மன்னிக்கும்
தமிழ்

*****************

பிள்ளையார்
சுழி
போட்டாய்
பிள்ளையாரே
வந்து
குடிகொண்டுவிட்டார்...


**************************
நீ
மீண்டும் மீண்டும்
தொட வேண்டும்
என்பதற்காகவே
தொடும்போதெல்லாம்
வாடாமல்
இருக்கிறது
தொட்டச்சினுங்கி



*********************
உன்னோடு
இருக்கும்
நேரங்களை
பத்திரப்படுத்துகிறது
என் கடிகாரம்


***********************
காற்றுக்குத்
தீனி போடுகின்றன
உன் கூந்தல்
பின்னலில்
சிக்காத சில
தலை மயிர்கள்...


************************
ஏதாவது
கோபத்தில்
உன்னைத் திட்டுவோம்
என்று தேடும் பொது
ஓடி ஒளிந்துகொள்கின்றன
வார்த்தைகள்...


****************************
உனக்குப்
பிடிக்காதவனாய்
இருப்பதைவிட
மரணித்து மரணித்து
உயிர்த்தெழுவேன்
உனக்குப்
பிடித்தவனாய்
பிறக்கும்வரை...

2 comments:

சிவப்ரியன் said...

அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்.

நாணல் said...

//உனக்குப்
பிடிக்காதவனாய்
இருப்பதைவிட
மரணித்து மரணித்து
உயிர்த்தெழுவேன்
உனக்குப்
பிடித்தவனாய்
பிறக்கும்வரை...//

நல்ல கற்பனை... :)