1.23.2010

காரணம்



ஏதாவது
காரணம்
கிடைத்துவிடுகின்றது
குடிப்பதற்கு...

காரணம் மட்டும்
போதுமானதாய்
இல்லை...

வறுத்த கோழி
சில சிக்கிரட்
சோடா -என
இன்னும் சிலவும்
தேவைப்படுகின்றது...

குடித்து
முடிக்கும்போது
எல்லாம்
முடிந்துபோக
காரணம் மட்டும்
அப்படியே
இருக்கிறது
அடுத்தநாள்
குடிப்பதற்காக...

4 comments:

தமிழ் said...

உண்மை தான் நண்பரே

நெடுங்கவிதை நீண்ட நாளுக்குப் பிறகு

வாழ்த்துகள்

தங்களின் வரியைப் படிக்கையில் இன்னும் ஒரு கவிதை ( கோகுலன் அவர்களின் வரிகள் )
.............................

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்
.............................

சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'

கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'

கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...'

உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!

தர்ஷன் said...

அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

சவிதா said...

Time does everything. It makes vision and thoughts more sharp and precious. It is true for your poems also. Experiencing something gives more understanding than when you just knowing it.