1.31.2010

விட்டில் பூச்சி

என் விளக்கின்
வெளிச்சத்திற்கு
விட்டில் பூச்சிகள்
வந்துவிடும்
என்ற
அச்சத்தில்
ஜன்னல் கதவுகள்
எல்லாவற்றையும்
மூடிவைத்துவிட்டு
கவிதை
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
விட்டில் பூச்சி!

வெளிச்சம்
கிடைக்காததால்
இருபத்திநாலு
மணிநேரத்திற்கு
முன்னமே இறந்து
விழுந்தன
விட்டில்
பூச்சிகள்...

5 comments:

அன்புடன் அருணா said...

அச்சோ!...நல்லாருக்கு.

மயாதி said...

நன்றி அருணா அக்கா

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான கவிதை! அசத்திட்டிங்க...! யா மனசுதான் சோகமா போச்சி..

ராமலக்ஷ்மி said...

கவிதை வெகு அருமை.

சக்தியின் மனம் said...

vittil poochi ungal kavithai vadivil pilathu kondathu nanbare..