12.12.2009

வாழ்க்கை நிறையைக் கவிதை(உரையாடல் போட்டிக்காக)

பிள்ளையார்
சுழியையையும்
ஏமாற்றிவிட்டு
வந்துவிடுகின்றன
எழுத்துப்
பிழைகள்...

...........................................

மரண பயத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மரணிக்கிறது
மனசு...

..........................................
பார்வையற்றவன்
பார்க்கிறான்....
கைபிடித்து
வீதிகடக்க
உதவும்
கையில்
முளைக்கும்
அன்புக்
கண்களால்....

...........................................

மலிவு விலையில்
வாங்கிய
அரிசியை
எப்படித்தான்
அரித்தாலும்....
வந்துவிடுகின்ற
கல்லைக்
காரணம் காட்டி
தொடங்குகிற
சண்டையே
அன்றைக்கு
அவன்
குடிக்கக் காரணம்
ஆகிவிடுகின்றது...
குடிக்கிற காசைக்
கொடுத்திருந்தால்
அடுத்த நாளாவது
நல்ல சோறு
சமைத்திருப்பாள்
எல்லோருக்கும்
சேர்த்து


.........................................

சாமியைத்தேடிப்
போனவன்
சாமியாகிப்போனான்
சாமியைக்
கானும்முன்னே

............................................




பூக்கத்தான்
செய்கிறது
விதவையின்
வீட்டு முற்றத்தில்
இருக்கும்
ரோஜாச் செடியும்...

***************************

சாந்தி
முகூர்த்தத்தில்
உருவாகும்
குழந்தைக்கும்
செவ்வாய் தோஷம்...


**************************

தடுக்கி
விழும்போது
அம்மா
என்றுதான்
அழைக்கிறது
அனாதையில்லத்தில்
இருக்கும்
குழந்தையும்....


*************************
வாழாவெட்டியின்
உடலிலும்
இன்னும் இருக்கிறது
உயிர்


**************************

முந்தியவை

வாழ்க்கை நிறையக் கவிதை


வாழ்க்கை நிறைய கவிதை





9 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எல்லாமே நல்லாயிருக்கு மயாதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

Anonymous said...

அனைத்தும் தத்துவமாய் மலர்ந்திருக்கிறது மயாதி..முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு...வெற்றி பெற வாழ்த்துக்கள்.. நலமா தம்பி?

அமுதா said...

அருமையான கவிதைகள்

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லாயிருக்கு மயாதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

தமிழ் said...

அருமை

வெற்றி பெற வாழ்த்துகள்

கலையரசன் said...

அருமையா இருக்குங்க எல்லாமே.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Arun Jeevan said...

EVERTHING IS NICE..

NICE WORDS TO READ..

ALL THE BEST...