10.03.2009

நெருப்புச் சுவாசம்





நெருப்பையே

சுவாசமாக்கும்...
உங்கள்
விதியையே
மாற்றி -
எழுதும்....
இந்த
வெள்ளை நிறப்
பென்சில்

************************************



முதலில்
ஆட்கொள்ளும்
பிறகு
ஆளையே
கொள்ளும்
பாசக் கயிற்றின்
பரிணாம
வளர்ச்சி
சின்னதாய்
ஒரு
சிகரெட் !

************************

தூக்கிப்போட்டு
கவ்விப் பிடித்தால்
ஆண்மைக்கு
ஸ்டைலாத்தான்
இருக்கும்
ஆனால்
அந்த ஆண்மையே
அழித்துவிடும் ...


வீரியத்தைக்
குறைத்துவிடும்
வீரியம் கொஞ்சம்
குறைந்த
இந்த
சயனைட்டுக்
குப்பிகள்...


**********************************

ரத்தக்குழாயை
அடைத்து
இதயத்துடிப்பை
நிறுத்தும்...

புற்று நோயாய்
மூச்சுக்குழாயை
அடைக்கும் ...

விந்துக்களின்
எண்ணிக்கை
மட்டுமல்ல
உன் வீரியத்தையே
குறைக்கும்....

இதற்குமப்பால்
உழைக்கிறேதெல்லாம்
உன் உதட்டில்
சிக்கிரெட்டாய்
புகைந்தால்...

உன் குழந்தை
உதட்டில்
வெற்று
சூப்பியை
சூப்பித்தான்
ஏமாந்து கொண்டிருக்கும் !





5 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

Hats Off!

யாழினி said...

எத்தனை சிந்தனைகள் எத்தனை விளம்பரங்கள் வந்தாலும் புகை மனிதர்கள் புகையை பகைப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை மயாதி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அர்த்தமுள்ள பதிவு மயாதி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

புகைப்பிடிப்பவர்களே கொஞ்சம் உங்கள் குடும்பத்துக்காக வாழுங்கள்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை! விழிப்புணர்வு கவிதை! நானும் புகைப்பதை பல முறை விட்டு இருக்கேன்(?)!