10.07.2009

பஸ்சில் பயணிக்கும் ஒரு காதல் கதை



நீயும்
நானும்
ஒரு பஸ்
வண்டியில்
பயணித்துக்
கொண்டிருந்தோம்...


ஓட்டுனருக்கு
எல்லோரும்
திட்டிக்கொண்டிருந்தார்கள்
மெதுவாக
ஓட்டுவதாகச்
சொல்லி...
நான் மட்டும்
வேகமாக
ஓட்டுவதாகச்
சொல்லி
திட்டிக்கொண்டிருந்தேன்!


நடத்துனர்
எங்கே போக
வேண்டும்
என்றதற்கு
உன் மனதிற்குள்
என்றுவிட்டேன்!


எல்லோரையும்
போல
பஸ் டிக்கெட்டை
பத்திரப் படுத்திக்
கொண்டேன் !
பரிசோதகருக்குப்
பயந்தல்ல...
உன்னோடு
பயணித்த
இந்த
டிக்கெட்டைவிட
நல்ல
ஞாபகச்சின்னம்
வேறென்ன
இருக்க
முடியும்...



பஸ் வண்டி
ஒவ்வொரு
நிறுத்தத்திலும்
தன் பயணத்தைப்
புதுப்பித்துக்
கொண்டது...
நீயும்
ஒவ்வொரு
புன்னகையின்
முடிவிலும்
உன் மௌனத்தைப்
புதுப்பித்துக்
கொண்டாய் ...


நீ என்னைப்
பார்ப்பதே
இல்லையே
என்று
கவலைப்
பட்டுக்கொன்டிருந்தேன் !
பிக்பொக்கட் காரன்
என் பேசை
எடுத்ததை
காட்டிக்கொடுத்து
நிரூபித்துவிட்டாய்
நீயும்
என்னைப்பார்க்கிறாய்....

புரிந்து கொண்டேன்
உன்னைப்போலத்தான்
எனக்கும்
நேரே பார்க்க
தைரியம்
இல்லையென்பதையும் !

ஒன்று மட்டும்
புரியவில்லை
எப்படி
நான் பார்க்காத
நேரத்தைச்
சரியாக
கண்டுபிடித்து
நீ பார்க்கிறாய்..?

திருட்டுத்தனமாய்
மௌனத்தில்-பேசத்
தெரிந்ததைப்போல
திரும்பியிருந்தே
திருட்டுத்தனமாய்
பார்க்கவும்
தெரிந்திருக்கிறது
உனக்கு


உன் வீட்டை
அண்மிக்க
அண்மிக்க
என் ஆயுளை
அண்மிக்கிற
அவதி -
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
இறங்கி விடுவாயே!


இருந்தாலும்
எல்லோரையும்
போல உன்
பயணப் பையை
மட்டும்
எடுத்துக்கொண்டு
நீ இறங்கவில்லை
கூடவே
என்னையும்
எடுத்த்க்கொண்டு
இறங்கினாய்...

புரிந்துகொள்!
உன்னோடான
என் வாழ்வின்
பயணம்
என்றும்
முடிந்து
விடுவதில்லை ...




6 comments:

FunScribbler said...

very nice and sweet poem. :)

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொரு
புன்னகையின்
முடிவிலும்
உன் மௌனத்தைப்
புதுப்பித்துக்
கொண்டாய் ...

எப்படி
நான் பார்க்காத
நேரத்தைச்
சரியாக
கண்டுபிடித்து
நீ பார்க்கிறாய்..?

ரொம்ப நல்லா இருக்கு மயாதி

Anonymous said...

காதலைப் போலவே கவிதையும் நீளமானது,,,,,எப்பவும் போல் திகட்டவில்லை...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகு!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான கவிதை, அழகாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.ரசித்தேன்.

jeyamee said...

\\ஒவ்வொரு
புன்னகையின்
முடிவிலும்
உன் மௌனத்தைப்
புதுப்பித்துக்
கொண்டாய் ...//
மிக அழகான கற்பனை
அழகான கவிதை