9.23.2009

தமிழரசி - ஒரு கவிதை

நட்புக்கு
நீ நம்பிக்கை

அன்புக்கு
நீ அட்சயபாத்திரம்

கவிதைக்கு
நீ கலங்கரைவிளக்கம்

தமிழுக்கோ
நீ அரசிமட்டுமல்ல
உயிரும்கூட .....

உனக்கு
ஒரு நாள்தான்
பிறந்தநாள்
தமிழுக்கோ
நீ கவிதை
எழுதும்
ஒவ்வொருநாளும்
பிறந்தநாள்....

உன்
வீட்டுத்தோட்டத்தில்
பூக்களுக்குப்
பதிலாய்
கவிதைகள்தான்
பூத்துக்
குலுங்க்குகின்றனவோ!

உன் எழுத்துக்கள்
அலங்கரிப்பது
வார்த்தைகளை
மட்டுமல்ல
வாழ்க்கையையும்தான் ...

எத்தனை பேர்
எழுத்துக்களை
வாசித்தாலும்
எழுத்துக்களுக்கே
தங்களை
உச்சரிக்கக்
கற்றுக்கொடுத்தது
உன்
எழுத்தோசையல்லவா!

உன்
எழுத்துக்களில்
பின்நவீனத்துவம்
இல்லை...
ஆனாலும்
பின் நாகரீகத்துவம்
இருக்கிறது !

எல்லோரும்
ஓட்சிசனை
உள்ளெடுத்து
காபனீரொட்சைத்தான்
வெளிவிடுவோம்...
நீயோ
உள்ளெடுப்பது
எதையானாலும்
வெளியிடுவது
கவிதைகளையல்லவா....


உனக்கு
கவிதை பிடிக்குமோ
இல்லையோ!
கவிதைகளுக்கு
உன்னைப்
பிடித்திருக்கிறது
அதுதான்
நீ எழுதும்
எல்லாமே
கவிதையாகிப்போகிறது...

உன்னைப்போல
எங்களைப்போல
உன் பிறந்தநாளை
கவிதைகளும்
கூடிக் -
கொண்டாடிக்கொண்டிருக்கிறது


உன் வீட்டை
விட்டு கொஞ்சம்
வெளியே
வந்துபார்
எல்லா
நட்சத்திரங்களும்
இன்று ஒளி
வீசுவதற்குப்
பதிலாய்
என்
கவிதைகளை
வீசிக்கொண்டிருக்கும்
உனக்கு
பிறந்தநாள்
பரிசாய்...

அபூர்வமாய்
கிடைத்த
நேரத்தில்
அவசரமாய் தர
இதைவிட
வேறு பரிசு
இல்லை
என்னிடத்தில்...

தமிழே நீ
வாழ்க .....
தமிழர்களைக்
காப்பாற்றத்தான்
யாருமில்லை
தமிழைக்
காப்பாற்றவாவது
நீ வாழ்க!!!!!!!!!!!

7 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தமிழரசி.

பிரியமுடன்...வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி


சூப்பர் மயாதி இந்த கவிதைகள் போல் படைக்க என்னால் இயலாது அது உங்களையும் தமிழரசியையும் போல் உள்ள கவிஞர்களால் மட்டுமே முடியும்...

ஜெஸ்வந்தி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி

நாணல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி

Sulthan said...

ஒரு கவிதையே கவிதையை வாழ்த்துகிறது

எங்கும் கவிதைமயம்

வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

ஒரு கவிதையே கவிதையை வாழ்த்துகிறது

எங்கும் கவிதைமயம்

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

நட்புக்கு
நீ நம்பிக்கை அன்புக்கு
நீ அட்சயபாத்திரம் - சத்தியம்

உன்னைப்போல
எங்களைப்போல
உன் பிறந்தநாளை
கவிதைகளும்
கூடிக் -
கொண்டாடிக்கொண்டிருக்கிறது - அழகு. அருமை, அற்புதம். நிதர்சனம்.

அன்புத் தோழி தமிழரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.