10.13.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

``அம்மா தாயே``
பிச்சை போடு
என்பதைக்கேட்டு
சந்தோஷப்படுகிறது
மலடி என்றே
அழைக்கப்படும்
ஒருவளின்
மனசு

***********************

தற்கொலை
செய்யாமல்
வாழத்தெரியாத
ஒருவனால்
தற்கொலை
செய்தபின்பு
கூட
வாழமுடியவில்லை

************************

காதலிக்கும் போது!
கவிதை
எழுதத் தெரிந்தவர்கள்
நல்ல கவிஞர்களாகிறார்கள்
தெரியாதவர்கள்
நல்ல ரசிகர்களாகிறார்கள்

*********************************

விரக்தியோடு
கவிதை
எழுதத்
தொடங்கினேன்
விரக்தி
கவிதையாகிப்போனது

****************************

அழுகின்ற
குழந்தைக்கு
பால் கொடுத்துவிட்டு
புறப்பட்டாள்...
கருக்கலைக்க
அழுதது
ஒரு குழந்தை
உள்ளே!

*********************

அழிந்து போ
என்று
சூனியம்
செய்கிறார்கள்....
ஒருவேளை
அழித்தல் கடவுளின்
அவதாரமோ!

*******************

கள்ளக்காதலியுடன்
சல்லாபம்
செய்யும்
மனதில்
அமர்ந்து
அவஸ்த்தைப்படுத்துகிறது
ஒரு கவலை
``என் மனைவியும்
இப்படி
இருப்பாளோ ?``

****************************

வாழ்வதற்கு
நான்
தயார்
வாழ்க்கை
தயாரா?
என்னைக் காப்பாற்ற
முடியாமல்
தடுமாறும்
வாழ்க்கையைக்
காப்பாற்றவே
நான்
வாழ்கிறேன்!

*********************

விதம் விதமாய்
சாப்பாடு
இருந்தாலும்
பேர்சில்
இருக்கும்
பட்ஜெட்டுக்கு
ஏற்பவே
சாப்பாட்டை
ஓடர் செய்யும்
எனக்கு
நாவடக்கம்
இல்லை
என்று
எப்படிச் சொல்வது

************************

சிலுவையில்
அறையுங்கள்
நானும்
கடவுளாகனும்
என்றவனால்
மீண்டும்
உயிர்த்தெழ
முடியவில்லை


8 comments:

முகமூடியணிந்த பேனா!! said...

ஒவ்வொன்றும் நறுக்! இதுவென்று சுட்டிக் காட்டி பாராட்ட முடியவில்லை.

அத்தனையும் அருமை...

ஊடகன் said...

//
வாழ்வதற்கு
நான்
தயார்
வாழ்க்கை
தயாரா?
என்னைக் காப்பாற்ற
முடியாமல்
தடுமாறும்
வாழ்க்கையைக்
காப்பாற்றவே
நான்
வாழ்கிறேன்!
//
வாழ்க்கையை வித்யாசமான கோணத்தில் சிந்தித்த திமிரானா கவிதை.......
அந்த திமிர் எனக்கு இந்த கவிதையில் பிடித்துள்ளது..........

கலையரசன் said...

//விரக்தியோடு
கவிதை
எழுதத்
தொடங்கினேன்
விரக்தி
கவிதையாகிப்போனது//

இதுதான் பாஸ் டாப்பு!!

தண்டோரா ...... said...

இரண்டு பகுதிகளாக போட்டிருக்கலாம் நண்பரே..அத்தனையும் முத்துக்கள்..

கவிக்கிழவன் said...

முத்து கவிதையை மொத்தமாய் அழகு

ஸ்ரீ said...

//ஒருவேளை
அழித்தல் கடவுளின்
அவதாரமோ!//

இது மட்டும் புரியவில்லை. மற்றவை அருமை.

goma said...

ஒவ்வொரு கவிதையும் ஒரு கருத்துப் பேழை

jeyamee said...

\\``அம்மா தாயே``
பிச்சை போடு
என்பதைக்கேட்டு
சந்தோஷப்படுகிறது
மலடி என்றே
அழைக்கப்படும்
ஒருவளின்
மனசு//
மிக சிறப்பான கவிதைகள் எல்லாமே,
இந்த வரிகள் மிக மிக சிறப்பக இருக்கு
அழகான தலைப்பும் கூட‌