10.19.2009

பேய்க் கவிதைகள் ( தைரியமானவங்க மட்டும் வாங்க ) )

நீ காதலிக்கவில்லை
என்ற சோகத்தில்
செத்துப் போனேன்!

என்ன பயன்?

நீ இறந்த
பின்பாவது
என்னைக்
காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
அதே சோகத்தோடு
காத்திருக்கிறேன்.

***************************

நான் இறந்தபின்பும்
உயிர்வாழ்வதாய்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
எனக்குள்
உயிர்வாழும்
உன்னையும்
சேர்த்து
புதைத்து
விடுவார்கள்
என்ற பயத்தில்

**********************************
நான்
இறந்த பின்பு
உன்னைப்பற்றி
எல்லோரிடமும்
சொன்னேன்!
எல்லோரும்
கவலைப்படுகிறார்கள்
உன்னைப்பார்க்காமலே
இறந்து விட்டதாக


*****************************

என்னைக்
கொலை
செய்தபின்புகூட
என்னை
எடுத்துப் போக
முடியவில்லை
எமனால்....
எமனல்ல
எவன் வந்தாலும்
எனைப்
பிரிக்க முடியாது
உன்னிலிருந்து....

***************************

உன்னை
மறந்து
கொண்டு
உயிர்வாழ்வதைவிட...
நினைத்துக்
கொண்டு
இறப்பது மேல் !

***************************

என் உடலை
எரித்து விட்டார்கள்
பரவாயில்லை
எனக்கு உயிர்
மட்டும் போதும்
உன் உடலின்
ஒரு மூலையில்
இருந்து
வாழ்ந்து விட்டுப்
போகிறேன்

************************

என்னை
எரிக்கும்
முன்பு...
நீ வருவாய்
என்று
பார்த்த்திருந்தேன்
பெண்கள்
சுடுகாட்டுக்கு
வரக்கூடதென்று
உன்னைத்
தடுத்து விட்டார்கள்
நீ இல்லாத
சுடுகாட்டில்
நான் எரிய
மாட்டேன் என்று
எழுந்து
வந்துவிட்டேன்

******************************


என் கல்லறையில்
வைக்கப்படும்
பூக்களையெல்லாம்
சேமித்துக்
கொண்டிருக்கிறேன்!
என்றோ
ஒருநாள்
நீ வரும்போது
தருவதற்காய்....

*****************************

முந்திய பேய்க் கவிதைகள் ,

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html


13 comments:

சி. கருணாகரசு said...

முழுக்கவிதையும் நல்லாயிருக்குங்க தோழர். வாழ்த்துக்கள்.

பூங்குழலி said...

நல்லா இருக்கு உங்க பேய்க் கவிதைகள் ....உங்க காதலி பாவம் தான்

Suresh Kumar said...

நான்
இறந்த பின்பு
உன்னைப்பற்றி
எல்லோரிடமும்
சொன்னேன்!
எல்லோரும்
கவலைப்படுகிறார்கள்
உன்னைப்பார்க்காமலே
இறந்து விட்டதாக /////////


பாவம் தான் இறந்த நல்ல மனிதர்கள்

Anonymous said...

நான் இறந்தபின்பும்
உயிர்வாழ்வதாய்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
எனக்குள்
உயிர்வாழும்
உன்னையும்
சேர்த்து
புதைத்து
விடுவார்கள்
என்ற பயத்தில்

இது ரொம்ப பிடிச்சிருக்கு...

மற்றவையும் அருமை உன்னால் மட்டுமே இப்படி ஒரு பிரசவத்தில் பல கருக்களை பிரசவிக்க முடியும் மயாதி..... நலமா?

மயாதி said...

நன்றி

சி. கருணாகரசு
பூங்குழலி
Suresh Kumar
தமிழரசி

நாலமாக இருக்கேன் அக்கா

ஸ்ரீ said...

அப்படி ஒண்ணும் பயமாயில்ல ,நல்லாத்தான் இருக்கு.

இய‌ற்கை said...

தங்களின் வலைப்பூ அறிமுகத்தை கீழுள்ள முகவரியில் தந்துள்ளேன்.வருகை தந்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_21.html

மயாதி said...

நன்றி இயற்கை
நன்றி ஸ்ரீ

விக்னேஷ்வரி said...

கவிதைகளெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு. நடத்துங்க.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//கவிதைகளெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு. நடத்துங்க.//

Repeatttttttttt.

aana inga mattum ennavam
http://vigneshwari.blogspot.com/2009/10/blog-post_06.html

:) :) :)

மயாதி said...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//கவிதைகளெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு. நடத்துங்க.//

Repeatttttttttt.

aana inga mattum ennavam
http://vigneshwari.blogspot.com/2009/10/blog-post_06.htmlஆமா

Anonymous said...

fantastic

me said...

மற்றவையும் அருமை உன்னால் மட்டுமே இப்படி ஒரு பிரசவத்தில் பல கருக்களை பிரசவிக்க முடியும் மயாதி..... நலமா?