11.28.2009

சுடுகாட்டில் இருந்து எழுதியவை !

சுடுகாட்டில்
பூக்கும்
பூக்களிலும்
வாசம் ....

****************

மயான
அமைதியில்
திடீரென
கேட்டன
ஒப்பாரிகள்...
ஒரு
பேய்
இறந்து போய்
இருந்தது...

*******************

ஒரு
உடல்
எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம்
கொஞ்சமாய்
வெளியேறியது
ஒரு பேய்


**********************

பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`


*************************`
ஒவ்வொருவரினுள்ளும்
ஒரு பேய்
இருக்கிறது
உயிரைச்சுவாசித்துக்
கொண்டு...
உயிர்பிரியும்
போது
அதுவும்
பிரிந்து
போகிறது....

********************
சுடலை
வைரவரை
வணங்கிவிட்டு
ஊருக்குள்
நுழைந்தது
ஒரு பேய்...
வைரவருக்கு
சடங்கு வைத்துக்
கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்...

பேயை
விரட்டச்சொல்லி


************************

படுகொலை
செய்யப்பட்ட
நிறையத் தமிழர்கள்
புதைக்கப் பட்டார்கள்
ஒரு குழிக்குள்...

ஒரு சிறிய
அகதிமுகாமில்
நிறையப்பேரை
அடைத்துவைத்து
பயிற்சிதந்தது
இதற்குத்தானா ...


***********************

உடலே
கிடைக்காமல்
சிதறிச்
செத்துப்போன
ஒரு உயிர்
தேடி அழைகிறது
தன் கல்லறையை




*************************

உலகம்
நிரம்பி
விட்டதால்
அடுத்த
பிறவிக்கான
வெயிட்டிங் லிஸ்டில்
நிறையப்
பேய்கள்...


தொடரும்....


முந்திய பேய்க்கவிதைகள்!

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html

http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`//

ரசித்து உணரமுடிஞ்சதப்பா.
அவ்வ்வ்...

கமலேஷ் said...

well said, you have felt well about what is human life and where its going to.... i like your lyrics very much.

அன்புடன் அருணா said...

//பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`//
அடடே!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ஒவ்வொருவரினுள்ளும்
ஒரு பேய்
இருக்கிறது
உயிரைச்சுவாசித்துக்
கொண்டு...//

அருமையான வரிகள்! இதயத்தை பிழியும் கவிதைகள்!! அருமை! அருமை!! ( ஆனா, தலைப்ப பார்த்தா தான் பயமா இருக்கு...)