11.19.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

பெண்களின்
கற்பை
அழித்தாலும்
ஆண்களின்
கற்பினைக்
காப்பாற்றி
விடுகின்றன
ஆணுறைகள்


*******************

நிலவைபார்த்துச்
சாப்பிடப்
பழகிய
குழந்தை...
நிலவைப்
பார்த்துச்
ஏமாறுகிறது
சாப்பாடு
எங்கே?

******************

கடவுளே
இல்லையென்று
வாதிட்டுவிட்டு
கோயிலுக்குப்
போனான்
மன்னிப்புக்
கேட்க...


*****************

பசியில்
அழுகின்ற
குழந்தைக்கு
பாசத்தை
ஊட்டிக்கொண்டிருந்து
வெற்றுச்
சூப்பி...

**************************

கொஞ்சமாய்
கிடைக்கும்
அரிசியில்
அதிகமாய்க்
கலந்து
சமைக்கும்
பாசமே
நிறையப்பேரின்
பசியை
ஆற்றுகிறது...
ஏழை
வீட்டில்

***************


சிக்னல்
நிறுத்தத்தில்
பிச்சை
கேட்கும்
சிறுவனின்
பசியின்
அவசரம்
புரியாமல்....
பேர்சை
எடுப்பதற்குள்
விழுந்துவிடுகிறது
பச்சை
விளக்கு


**********************

புது வருடத்தில்
புது மனிதனாய்
வாழ
சாபதமெடுததேன்..
கதவைத்
தட்டினான்
பழைய
கடன்காரன்


************************


6 comments:

thiyaa said...

உங்களின் குட்டிக் கவிதைகள் அருமை

அன்புடன் நான் said...

கொஞ்சமாய்
கிடைக்கும்
அரிசியில்
அதிகமாய்க்
கலந்து
சமைக்கும்
பாசமே
நிறையப்பேரின்
பசியை
ஆற்றுகிறது...
ஏழை
வீட்டில்//

மிக‌ உண்மையே! அருமை !

அன்புடன் நான் said...

சின்ன கவிதைகளின் சிகரம் நீங்க கவிதை அத்தனையும் அருமை. தொடர்க.

velji said...

கவிதைகள் அருமை.

முதல் கவிதை உலகத்தரம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான கவிதைகள்.

vela said...

கடைசி கவிதை நன்று.