11.26.2009

ஒரு காதல் கவிதை

என்னையறியாமல்
உறங்கியபோது
நீ வந்தாய் !
இமைகளைத்தாண்டி
வெளியேறியது
கண்கள் ....

***********************
வருகின்ற
அலைகளுக்குத்
திரும்பிபோக
மனசில்லை
கடற்கரையில்
நீ ....


***********************
நீ
பூசிக்கொண்டாய்
புனிதமானது
திருநீறு


*********************
இதுவரை
முடிந்து போன
என்
ஒவ்வொரு
ஜென்மத்தின்
மரணத்தின்
போதும்...
அடுத்த
ஜென்மத்திலாவது
உன்னோடு
வாழ வேண்டும்
என்று
வேண்டிக்கொண்டுதான்
செத்தேன்..


இந்த
ஜென்மத்தில்
முடிவெடுத்து
விட்டேன்
இறப்பதேயில்லை
என்று************************
உன்னோடு
வாழாத
நாட்களை
வரவுவைக்க
மறுக்கிறது
வாழ்க்கை

*************************


3 comments:

சி. கருணாகரசு said...

வருகின்ற
அலைகளுக்குத்
திரும்பிபோக
மனசில்லை
கடற்கரையில்
நீ ....//

காதல் கவிதை மிக அழகு....தொடருங்க....

தர்ஷன் said...

இப்படியே போனால் தபு சங்கர் மூட்டை கட்டி விட வேண்டியதுதான்
வாழ்த்துக்கள்

ஸ்ரீ said...

அத்தனையும் அருமை.