11.01.2009

சீரியஸா ஆனால் சின்னதா மூன்று கவிதை

அம்மா

முதல் முறை
குழந்தை அழுதது
அம்மா சிரித்தாள்
மீண்டும் மீண்டும்
அழுதது
அம்மா மரித்தாள்
**************************************

தடுக்கி விழுந்த
குழந்தைக்கு
வலிக்கவில்லை
ஆனாலும்
அழுதது...
ஆனால்
அம்மாவுக்கு
வலித்தது



செருப்பு

சுமையாகிப்போனது
அறுந்த
செருப்பு

*****************************************

புதிய செருப்பை
கழற்றிவிட்டு
கோயிலுக்குள்
போனேன்...
அடிக்கடி
வெளியே வந்து
போனது
மனசு


***************************************

காதல்

கோபத்தில்
என்
தொலைபேசி
அழைப்பை
மறுத்தாய்...
எனக்கும்
கோபித்துக்
கொள்ள
ஒரு
காரணம்
கிடைத்துவிட்டது

கோபங்கள்தானே
பிரிந்திருக்கிற
நம்மை
சிலவேளைகளில்
சேர்த்துவைக்கிறது...

கோபத்தை
தீர்த்துக்
கொள்வதற்காகவே
அடிக்கடி
சந்தித்துக்
கொள்கிறோம்


5 comments:

கவி அழகன் said...

நன்றாக உள்ளது உங்கள் கவிதை

keetha said...

நன்றாக உள்ளது

Muruganandan M.K. said...

"..சுமையாகிப்போனது
அறுந்த
செருப்பு.."
நல்ல வரிகள்

அமுதா said...

/*புதிய செருப்பை
கழற்றிவிட்டு
கோயிலுக்குள்
போனேன்...
அடிக்கடி
வெளியே வந்து
போனது
மனசு
*/
இரசித்தேன்

Unknown said...

மூன்று கவிதைகள் எண்டீங்க... எண்ணிப் பாத்தா கூடக் கிடக்குதே???
ஹா ஹா.... சும்மா... நகைச்சுவைக்காக....

நல்ல கவிதைகள்....

குறிப்பாக,
//புதிய செருப்பை
கழற்றிவிட்டு
கோயிலுக்குள்
போனேன்...
அடிக்கடி
வெளியே வந்து
போனது
மனசு//

இந்தக் கவிதை ரொம்பவே பிடித்துப் போனது....