11.17.2009

விபரீதமான சில கவிதைகள்




வன்முறை


ரசிப்பதற்காய்
அடைத்து
வைத்த
குருவியின்
குஞ்சுகள்
அனாதைகள்....


விர()க்தி

குடம்
குடமாய்
பால்
ஊற்றினார்கள்
சாமி
அழுதுகொண்டிருந்தது
பசியோடு
கன்றுகள்


அபலைகள்

அனாதை
இல்லத்தில்
அம்மாக்களும்
அப்பாக்களும்
இல்லாத
குழந்தைகள்....

முதியோர்
இல்லத்தில்
பிள்ளைகள்'
இருக்கும்
அம்மாக்களும்
அப்பாக்களும்



விபச்சாரியின் வேண்டுகோள் !

கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!



அழுக்கு

உங்கள்
கண்களில்
இருக்கும்
அழுக்கினை
அகற்றி
விடுங்கள்
எல்லோரும்
அழகுதான்


மூட நம்பிக்கை

ஆத்திகத்திற்கும்
நாத்திகத்திற்கும்
இடையே
ஒரே ஒரு
வேறுபாடுதான்
கற்களை
கடவுளாக்கிப்
பார்ப்பது
ஆத்திகம்
கடவுளை
கற்களாக்கிப்
பார்ப்பது
நாத்திகம்...



கடவுளுக்கு
நான்
கொடுத்த
நேர்த்திக்
கடன்தான்
வாழ்க்கையில்
நான் கொடுத்த
முதல்
லஞ்சம்


ஆதிக்கம்

அப்பன்
பெயர் தெரியாத
குழந்தைகள்
என்று
குழந்தைகள்
தண்டிக்கப்பட
அப்பாக்கள்
தப்பித்து
விடுகிறார்கள்


சேமிப்பு

என்னை
அறியாமல்
தூங்கிப்
போனாலும்
விடியும் போது
நான்
இருக்கிறேன்
நானாக..


வாழ்க்கை

நான்
வாழ்ந்து
முடிக்கும்
முன்பே
என்
வாழ் நாளின்
ஒவ்வொரு
நாட்களும்
முடிந்து
போகிறது



முகவரி

அகதி முகாமில்
பிறக்கும்
குழந்தைக்கு
வீடு
அகதி முகாம்


பாசம்

பசியில்
அழுகின்ற
குழந்தையின்
வாயில்
வேறு
வழியில்லாமல்
வெற்றுச்
சூப்பியை
வைக்கும் போது
தூங்கிப் போன
குழந்தைகள்
சிலவேளை
நடிக்கலாம்
தூங்குவதைப் போல..
அம்மாக்கள்
கவலைப் படக்கூடாது
என்பதற்காக


10 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சூப்பர் மயாதி. எல்லாமே வியக்கும் வண்ணம் இருக்கிறது. பாராட்டுக்கள்.

கவி அழகன் said...

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்

Unknown said...

//குடம்
குடமாய்
பால்
ஊற்றினார்கள்
சாமி
அழுதுகொண்டிருந்தது
பசியோடு
கன்றுகள் //

எனக்குப் மிகப் பிடித்துக் கொண்டது இந்தக் கவிதை...

அனைத்துக் கவிதைகளும் அற்புதம்.


//கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!//

வறுமையின் கோரம்........

அற்புதமான கவிதைகள்.....

பூங்குழலி said...

அருமையான நச் கவிதைகள் மயாதி

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே அருமை.

அபலைகள் ரொம்ப நல்லா இருக்கு

தமிழ் said...

ஒவ்வொன்றும் அருமை
ந‌ண்ப‌ரே

வாழ்த்துக‌ள்

அன்புடன் அருணா said...

எதைச் சொல்வது? எதை விடுப்பது? அத்தனையும் மனதை அள்ளியது.....பூங்கொத்து!

velji said...

எல்லாமே நல்லாயிருக்கு.கவிதைகள் திசைக்கொன்றாய் பயணிக்கின்றன.அருமை.

Anonymous said...

//விபச்சாரியின் வேண்டுகோள் !

கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!//


வறுமைக் கொடுமையின் உச்சம் கண்கலங்குகிறது...

அன்புடன் நான் said...

அழுக்கு

உங்கள்
கண்களில்
இருக்கும்
அழுக்கினை
அகற்றி
விடுங்கள்
எல்லோரும்
அழகுதான்//

மிக‌ அழ‌கு!