11.08.2009

சின்னதா சில கவிதைகள்

ஒரு விபச்சாரியின் நியாயம்

கற்பின்
விலையைத்
தீர்மானிக்கும்
பசி


கற்பை
புனிதமாக்கி
பக்தனாக
இருந்தாலும்
பசிக்கு
அடிமையாகத்தான்
இருக்க
வேண்டும்

**********************


ஒரு காதல் கவிதை

கடவுள்
எத்தனை
அழகான
கவிதைகளை
படைத்திருந்தாலும்
எழுத்துப் பிழை
இல்லாமல்
எழுதிய
முதல் கவிதை
நீ.....

*************************


சின்னதா ஒரு கற்பனை

ஒரு துளியையேனும்
வீணாக்காமல்
குடித்துக் கொண்டிருந்தது
மண்
பெய்து கொண்டிருந்து
மழை ....


**************************

திருவிழா]

பண்டிகையில்
மிஞ்சியதை
அடுத்தநாள்
குப்பையில்
கொட்டினார்கள்...
பிறந்தது
தெருவோரக்
குழந்தைகளுக்குப்
பண்டிகை



********************




9 comments:

Anonymous said...

அத்தனையும் தத்துவ முத்துக்களாய் உதிர்ந்திருக்கிறது...மயாதியால் மட்டுமே இவ்வகை சாத்தியம்...

Ungalranga said...

திருவிழா கவிதை மிக அருமை..!!

நெஞ்சை தொட்டது,அறிவை சுட்டது.

:)

Sen22 said...

Super Kavithaigal..

velji said...

/பக்தனாக
இருந்தாலும்
பசிக்கு
அடிமையாகத்தான்
இருக்க
வேண்டும்/
-superb.

S.A. நவாஸுதீன் said...

திருவிழா கவிதை ”நச்”

Suresh Kumar said...

எல்லா கவிதைகளும் நச் ........... நூறு பாலோயர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழ் said...

அருமை

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகான கவிதை!

CS. Mohan Kumar said...

அருமையான கவிதைகள் புது செருப்பு பற்றி இதே போல் நானும் ஒரு கவிதை எழுதியிருந்தேன்

மோகன் குமார்
குறிப்பு: யூத் விகடனில் நேற்று எனது கவிதைகள் வெளி ஆகின. வாசிக்க:

http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp