11.10.2010

வெட்கத்தின் வார்த்தைகள்..

நீ வரமாட்டாய்
என்று
தெரிந்தும்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஏமாற்றத்தையாவது
எனக்காகத்
தருகிறாயே
என்ற
சந்தோசத்தோடு...

என்ன
வரம்
வேண்டும்
என்ற
கடவுளிடம்
உன்னைக் கேட்டேன்
மன்னித்துக்கொள்
வரம் மட்டுமே
தர முடியும்
தேவதையைத்
தரமுடியாது
என்று சொல்லி
மறைந்துவிட்டான்
கடவுள்


ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...

நீ
வெட்கத்தில்
முகத்தை மூடிய
பின்னும்
வெளியில்
தெரிந்துகொண்டேதான்
இருக்கிறது
வெட்கம்..

மௌனம்
உன் வெட்கத்தின்
வார்த்தைகள் ...

கடந்துபோகும்
அந்த
அவகாசத்தில்
எப்படி
என்னைக் கடத்திப்
போகிறாய்...

என் இதயத்தின்
நீ இருக்கும்
அறையைவிட்டு விட்டு
மற்ற
மூன்று அறைகளையும்
மூடிவிட்டேன்....
கோயிலுக்கு
ஒரு கர்ப்பக்
கிரகம்தான்
இருக்கவேண்டும்...


எனக்கு
இன்னும் நிறைய
உயிர் வேண்டும்
உனக்காக
விடுவதற்காக


9 comments:

நாணல் said...

//என் இதயத்தின்நீ இருக்கும்அறையைவிட்டு விட்டு மற்ற மூன்று அறைகளையும் மூடிவிட்டேன்....கோயிலுக்கு ஒரு கர்ப்பக்கிரகம்தான்இருக்கவேண்டும்...//

nice :)

முனைவர்.இரா.குணசீலன் said...

அழகு கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்!

மயாதி said...

நாணல் said...
//என் இதயத்தின்நீ இருக்கும்அறையைவிட்டு விட்டு மற்ற மூன்று அறைகளையும் மூடிவிட்டேன்....கோயிலுக்கு ஒரு கர்ப்பக்கிரகம்தான்இருக்கவேண்டும்...//

nice :)//

thanks naanal

மயாதி said...

முனைவர்.இரா.குணசீலன் said...
அழகு கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்!

November //

thanks

kutipaiya said...

:) nice!

திகழ் said...

அருமை

Ilayanila Fazmina Ansar said...

MIHAWUM AZHAHIYA WAARTHAI PRAYOGAM.KAADALIN SUGAMUM SUMAIYUM KAWI WARIGALIL THERIGIRATHU.WAAZHTHUKKAL

sultan23 said...

ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...


அருமை

solai said...

ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...

உண்மை......