11.03.2010

தீபாவளிச் சிறப்புக் கவிதைகள்


நீ
வாழ்த்துச்
சொல்லாத
தீபாவளி
சாதாரண
நாளாகிப்
போனது
நீ
வாழ்த்துச்
சொன்ன
சாதாரண
நாள்
தீபாவளியாகிப்
போனது..


நீ
தீபம் ஏற்றும்
வரைக்
காத்துக்
கொண்டிருக்கும்
தீபாவளி
தன்னைக்
கொண்டாட


சனங்களுக்கு
ஒருநாள்
தீபாவளி
தினங்களுக்கு
நீ
வரும்நாள்
எல்லாம்
தீபாவளி
நீ போட்ட
தீபாவளிக்
கோலத்தைக்
கலைத்துவிட
முடியாமல்
ரசித்துக்
கொண்டிருக்கின்றன
எறும்புகள்...

நீ என்னைச்
சேரும் வரை
காத்துக்கொண்டிருக்கும்
எனது தீபாவளி
கொண்டாடப்படுவதற்காக

4 comments:

தமிழ் திரு said...

நல்லா இருக்கு .... தீபாவளி வாழ்த்துகள் !!!

Anonymous said...

எல்லாவற்றிலும் ஒரே தகவல் ஒன்னா இணைத்து ஒரு கவிதை சுவையா கொடுத்து இருக்கலாம் பரிசிலிக்கவும் தம்பி...

மயாதி said...

தமிழ் திரு said...
நல்லா இருக்கு .... தீபாவளி வாழ்த்துகள் !//

thanks

மயாதி said...

தமிழரசி said...
எல்லாவற்றிலும் ஒரே தகவல் ஒன்னா இணைத்து ஒரு கவிதை சுவையா கொடுத்து இருக்கலாம் பரிசிலிக்கவும் தம்பி...
//
ok akka