தீபங்கள் அல்ல
சூரியன்களே
வந்தாலும்
ஒளி ஏற்ற
முடியுமா
இவர்களின்
வாழ்க்கையை....
இன்றைக்குத்தான்
இவளுக்குத்
தீபாவளி
பிச்சைக் காரனுக்கு
மட்டும்தான்
நிஜமான
தீபாவளி
மிச்சமாய்
நிறையக் கிடைக்கும்
தீபாவளிக்
கொண்டாட்டங்கள்
முடிந்தபின்னும்
தொடரும்
அதற்காக
வாங்கிய
கடன்கள்...
ஒரு அசுரன்
அழிந்ததைக்
கொண்டாடுகிறோம்...
அழிந்தது
அந்த ஒரு
அசுரன்
மட்டுமே
என்பதை
உணராமல் ..
தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...
9 comments:
வலிகள் கசியும் வார்த்தைகள் . கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி
நன்றி சங்கர்
கவிதை உணர்வுடன் படைக்க பட்டிருக்கிறது....யதார்த்தம்...!!
வலிகள் வாழ் நாளெல்லாம் சுமந்தால் எப்படி என்பதற்காக தான் வருடத்தில் சில நாள் இப்படி கொண்டாட..
//தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...//
அருமை.
Kousalya said...
கவிதை உணர்வுடன் படைக்க பட்டிருக்கிறது....யதார்த்தம்...!!//
நன்றி
தமிழரசி said...
வலிகள் வாழ் நாளெல்லாம் சுமந்தால் எப்படி என்பதற்காக தான் வருடத்தில் சில நாள் இப்படி கொண்டாட...//
என்ன சண்டைக்கு பிளான் பண்ணுறீங்களா?
ஜெஸ்வந்தி said...
//தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...//
அருமை.//
நன்றி அக்கா
தீபாவளிக்
கொண்டாட்டங்கள்
முடிந்தபின்னும்
தொடரும்
அதற்காக
வாங்கிய
கடன்கள்...
romba nalla iruckunga ...congrats.
Post a Comment