7.04.2009

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு

அநேகமானோர் வலிப்பு ஏற்பட்ட நபரை நேரிலே பார்த்த அனுபவம் பெற்றிருக்கலாம்,அல்லது சினிமாவிலாவது கட்டாயம் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டாலே அவருக்கு காக்காய் வலிப்பு(எபிலெப்சி/epilepsy )நோய்தான் இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.

காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.

இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.

ஒரு சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வந்திருக்கும் நேரத்தில் வலிப்பு வந்தால் ,

முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.

அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .

ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

febrile fits எந்த வயதினருக்கு ஏற்படும்?

பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் .
(இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)

ஒருமுறை febrile fits வந்தால் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?

30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.

febrile fitsயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு நோய் ஏற்படலாமா?

மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

ஒருமுறை febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு மறு முறை காய்ச்சல் வரும் போது தாய் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.

குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)

அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.

அவையாவன ,

  1. ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
  2. மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
  3. மெல்லியஆடைஅணிவித்தல்

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு அதை தடுப்பதற்காக ஏதாவது மருந்துகள் கொடுக்கப் பட வேண்டுமா?

வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும்.
( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)

febrile fits ஏற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப் படும் போது ஏதாவது முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா?

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

ஒரு பிள்ளைக்கு வலிப்பு வரும் போது அருகில் இருப்பவர்கள் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நடைமுறைகள் என்ன ?

முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .

பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)

நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)

வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).

இது பற்றிய சரியான நடைமுறையை ஒவ்வொரு தாயும் வைத்தியரிடம் கேட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இது ஒரு உயிர் காக்கும் செயமுறையாகும்.


பி.கு- இந்த இடுகை ஒரு பதிவரின் தேவை அறிந்து , அவருக்காக இடப்படுகிறது.








29 comments:

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு மயாதி !!!

காக்காய் வ‌லிப்பு த‌விர, ஃபிட்ஸ் வ‌ருவ‌த‌ற்கான‌ முக்கிய‌ கார‌ணி நியூரோ என்ற‌ழைக்க‌ப் ப‌டுகிற‌
ந‌ர‌ம்பிய‌ல் தான்.

என் அண்ணனுக்கு மூளையில் நீர்க்கோவை (ஹைடிரோசிப்பெலஸ்) என்ற
நோய் இருந்தது.அவருக்கு தொடர்ந்து 4 அல்லது 5 மணி நேரங்கள் வரை ஃபிட்ஸ் வரும்.
ஒவ்வொரு முறையும் என் பெற்றோர் போராடிய‌தை அருகிலிருந்து
பார்த்திருக்கிறேன்.அந்த‌ நினைவுக‌ள் இன்ற‌ள‌வும் ம‌ன‌தை விட்டு அக‌ல‌வில்லை.

//ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
மெல்லியஆடைஅணிவித்தல்//

நீங்க‌ள் சொன்ன‌து த‌விர‌ இன்னொரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம்.

ஃபிட்ஸ் வ‌ரும் போது த‌ன்னைய‌றியாமல் அவர்கள் நாக்கை ப‌ற்க‌ளால் க‌டிப்பதால் வாயில் ர‌த்த‌ம் வ‌ழிந்தோடும்.என‌வே அப்போது ஒரு ஸ்பூனில் ஒரு சிறுதுணியை சுற்றி வாயில் திணிக்க‌ வேண்டும்.

மேலும் வ‌லிப்பு வ‌ரும் ந‌ப‌ராக‌ இருந்தால்,அவ‌ர் த‌னியாக‌ வெளியே செல்லும் போது
வீட்டின் முக‌வ‌ரி,செல் ந‌ம்ப‌ர் உட்ப‌ட‌ அனைத்து விபர‌ங்க‌ளும் கொண்ட‌ அடையாள‌ அட்டையை அவ‌ர் ச‌ட்டைப்பையில் வைத்திருக்க‌ வேண்டும்.

அமுதா கிருஷ்ணா said...

பிறந்து 10 நாளே ஆன குழந்தைக்கு வலிப்பு வந்து 20ஆவது நாளில் கால்சியம் குறைவால் தான் அந்த ஃபிட்ஸ் வந்தது என்று கண்டு அறிந்து கால்சியம் கொடுக்க ஆரம்பித்தப் பின் ஃபிட்ஸ் பின் வரவே இல்லை...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என் சொந்தகாரக் குழந்தை ஒன்றுக்கு autism என்ற நோயுள்ளது. அந்தக் குழந்தையும் இந்த வலிப்பினால் பாதிக்கப் படுகிறது. இந்த நோயினால் மூளையில் சிறிய பகுதிகள் பாதிக்கப் படுவதால் தான் இந்த வலி ஏற்படுகிறது என்று அறிந்து கொண்டேன்.

sakthi said...

நன்றி மயாதி

sakthi said...

என்னை போன்ற சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு
மிகப்பயனுள்ள பதிவு...

ப்ரியமுடன் வசந்த் said...

மிகவும் பயமுள்ள பயனான பதிவு மயாதி

டாக்டராய் தங்கள் கருத்துக்கள்

நீங்க மருத்துவரா?

சென்ஷி said...

மயாதி,

மிக்க பயனுள்ள பதிவு.. நன்றி!

Anonymous said...

மிக மிக பயனுள்ள பதிவு மயாதி..வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க....

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையான பதிவு மயாதி. உபயோகமான தகவல் பரிமாற்றம். ரொம்ப நன்றி. தொடர்ந்து இதுபோன்றும் எழுதுங்கள், குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது டாக்டர்.

ரெட்மகி said...

என்ன அண்ணே இப்படி பின்றிங்க

ஷாகுல் said...

நல்ல தகவல்.

அப்துல்மாலிக் said...

இந்த நோய் சிறுவயதில் நிறைய பார்த்ததுன்டு, இப்போ நிறைய தடுப்பூசியினால் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டிருகிறது என்று நினைக்கிறேன்.

நோய் பற்றிய விளக்கமும், அதற்கான அறிகுறியும், அது தடுப்பதர்கு உள்ள நடவடிக்கையும் அழகா விளக்கியுள்ளீர்

தொடருங்கள்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்ல பதிவு.. அப்படியே மருத்துவர் மாயாதி என்று பேர் மாத்துற நோக்கம் ஏதும் இருக்கா..

சுசி said...

மிகவும் பயனுள்ள ஒரு பதிவை தந்ததுக்கு நன்றி மயாதி. (நீங்க என்ன மாதிரி இல்லாம நிஜம்மா டாக்டரா இருப்பீங்க போல இருக்கே....)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

good & useful post + (Dr.)

நட்புடன் ஜமால் said...

நல்ல பயனுள்ள பதிவுங்கோ !

bala said...

பயனுள்ள தகவல் மயாதி.

நேசமித்ரன் said...

மிகவும் பயனுள்ள ஆழமான பதிவு
உங்கள் பதிவு தொடரட்டும்

Admin said...

நல்ல பயனுள்ள பதிவு நன்றிகள்.....

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் பயனுள்ள பதிவு. அனைவரின் சார்பாகவும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

தக‌வலுக்கு நன்றி.

SUFFIX said...

உபயோகமான தகவல் நன்பரே, படித்த விடயங்கள் பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயனுள்ள பதிவு

என் அம்மாவுக்கு இந்த காக்கா வலிப்பு என்ற பிட்ஸ் அடிக்கடி வரும். இன்னும் அந்த தொந்தரவு அவர்களுக்கு உண்டு. அந்த சமயத்தில் அம்மாவை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கும். :(

இந்தப் பதிவு ரொம்பவும் பயனுள்ள பதிவு. அம்மாக்கள் வலைப்பூவில் இணைக்க உங்களின் அனுமதி வேண்டும்.

மாதங்கி said...

பயனுள்ள பதிவு மயாதி

Revathyrkrishnan said...

மிக உபயோகமான குறிப்புகள்... இத்தகைய குழந்தைகள்/பெரியவர்கள் கண் பரிசோதனைக்கு செல்லும் போது தனக்கு இதற்கு முன் வலிப்பு வந்திருக்கிறது என்பதை முதலிலேயே சொல்ல வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு... கண்ணில் விடப்படும் "சைக்ளோ பென்டொலேட்" எனப்படும் டைலேஷன் மருந்து நரம்பு மண்டலத்தை ஊடுருவும் ஆதலால் வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இந்த மருந்தினால் வலிப்பு வர வாய்ப்புள்ளது

vasu balaji said...

இடுகைக்கு நன்றி மயாதி. நம்ம திண்ணைக்கு வந்து போங்க ப்ளீஸ். http://paamaranpakkangal.blogspot.com/2009/07/blog-post_23.html

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

d.s.sankar 09443229286 said...

thanks for your kind information
d.s.sankar 09443229286

D.S.SANKAR 09443229286 said...

ALL CHILDREN ARE NEVER AFFECT BY BRAIN FEVER. FEW CHILDREN ARE ONLY AFFECTED BY SEIZURES



TAB:
CORDINAL,
FRISEUM
OXETOL

FOR SEIZURS