8.04.2009

கேள்வி பதில்


அஜீரணம்

கழிந்து
போகின்ற
ஒவ்வொரு நாளும்
என் ஆயுளின்
ஒரு நாள்
என்று
தெரிந்தாலும்
ஒரு நாளைக்கூட
என்னால்
சேமிக்க
முடிந்ததில்லை...


காரணம்


நேற்று
நாளை
இரண்டிலும்
இன்றுபோல்
இருபத்தி நாலு
மணிதான்....

இருந்தாலும்
நேற்றில்
நாளையில்
இருக்கும்
ஒரு நிமிஷத்தைக்கூட
கூட
இன்றில்
கண்டு பிடிக்க
முடியவில்லை...

26 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆச்சே! எங்கே நண்பரே


யாவும் / யாவரும் நலம் தானே ...

நட்புடன் ஜமால் said...

அருமை கவிதை மயாதி


--------------------

மனிதர்களை இழுத்து கொண்டு
ஓடுகின்றன கடிகார முட்கள்
அவை அவையின் இடத்திற்கு
திரும்பி விட்டாலும்
காலம் இழந்ததாகவே கருதப்படுகிறது
மனிதன் திரும்புவதுமில்லை

தமிழரசி said...

அக்கா கோவமா இருக்கேன்..இத்தனை நாள் எங்க போன என்ன ஆன இதையெல்லாம் சொல்லாமல் நீ பாட்டுக்கு வந்து பதிவு போட்டா என்ன அர்த்தம் போடா? உன் பேச்சி கா?முதல்ல காரணம் சொல்...

சி. கருணாகரசு said...

கவிதை அருமை.

ஜெஸ்வந்தி said...

என்ன கவிதை இது. நேரத்தைச் சேமிக்க முடியவில்லை என்று. கொஞ்சக் காலம் தேடாதீர்கள் என்று ஒரு வரி எழுதிட்டுப் போறது தானே. அனுப்பின மெயிலுக்கும் பதிலில்லை. இப்போ வந்து கவிதை எழுதுவாராம். நாங்கள் வந்து கவிதை நன்று என்று கருத்துப் போடுவோமாம். போடா ...போ

தமிழரசி said...

ஜெஸ்வந்தி said...
என்ன கவிதை இது. நேரத்தைச் சேமிக்க முடியவில்லை என்று. கொஞ்சக் காலம் தேடாதீர்கள் என்று ஒரு வரி எழுதிட்டுப் போறது தானே. அனுப்பின மெயிலுக்கும் பதிலில்லை. இப்போ வந்து கவிதை எழுதுவாராம். நாங்கள் வந்து கவிதை நன்று என்று கருத்துப் போடுவோமாம். போடா ...போ

சரியாச் சொன்ன ஜெஸ் நானும் இதை ஆமோதிக்கிறேன்... நாம எல்லாம் பதறிட்டோம் என்னமோ ஏதோன்னு அதுவும் வந்ததும் கவிதை ....இப்ப வந்து என் மெயிலுக்கு பதில்...பார்த்தியா கோவத்தில் நான் டா சொல்ல மறந்திட்டேன் போடா போ....ஹிஹிஹி

பிரியமுடன்.........வசந்த் said...

எங்கப்பா போன இத்தனை நாளா?

நர்ஸ் எதும் லவ் கிவ்வு?

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆச்சே! எங்கே நண்பரே


யாவும் / யாவரும் நலம் தானே ...//என்ன செய்ய ? இணையம் எட்டி விட முடியாத தூரத்தில் இருந்ததால் உங்களை எல்லாம் எட்டிப் பார்க்க முடியவில்லை.

வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை நலமாகத்தான் இருக்கேன்.

நன்றி

மயாதி said...

தமிழரசி said...

அக்கா கோவமா இருக்கேன்..இத்தனை நாள் எங்க போன என்ன ஆன இதையெல்லாம் சொல்லாமல் நீ பாட்டுக்கு வந்து பதிவு போட்டா என்ன அர்த்தம் போடா? உன் பேச்சி கா?முதல்ல காரணம் சொல்...//

கோபமா ???????

உங்களுக்குத்தானே கோபமே வராதே அக்கா , சும்மா பொய் சொல்லாதீங்க.

மயாதி said...

சி. கருணாகரசு said...

கவிதை அருமை.//

நன்றி நண்பரே

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

என்ன கவிதை இது. நேரத்தைச் சேமிக்க முடியவில்லை என்று. கொஞ்சக் காலம் தேடாதீர்கள் என்று ஒரு வரி எழுதிட்டுப் போறது தானே. அனுப்பின மெயிலுக்கும் பதிலில்லை. இப்போ வந்து கவிதை எழுதுவாராம். நாங்கள் வந்து கவிதை நன்று என்று கருத்துப் போடுவோமாம். போடா ...போ

உங்கள் மெயில் படிக்காமல் முதலில் என் கவிதை படித்த உங்களுக்கு நன்றிகள் நண்பியே !

மயாதி said...

தமிழரசி said...

ஜெஸ்வந்தி said...
என்ன கவிதை இது. நேரத்தைச் சேமிக்க முடியவில்லை என்று. கொஞ்சக் காலம் தேடாதீர்கள் என்று ஒரு வரி எழுதிட்டுப் போறது தானே. அனுப்பின மெயிலுக்கும் பதிலில்லை. இப்போ வந்து கவிதை எழுதுவாராம். நாங்கள் வந்து கவிதை நன்று என்று கருத்துப் போடுவோமாம். போடா ...போ

சரியாச் சொன்ன ஜெஸ் நானும் இதை ஆமோதிக்கிறேன்... நாம எல்லாம் பதறிட்டோம் என்னமோ ஏதோன்னு அதுவும் வந்ததும் கவிதை ....இப்ப வந்து என் மெயிலுக்கு பதில்...பார்த்தியா கோவத்தில் நான் டா சொல்ல மறந்திட்டேன் போடா போ....ஹிஹிஹி//


விட்டா என்னை திட்டுறதுக்கு சங்கம் வைப்பீங்க போல இருக்கு..

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

எங்கப்பா போன இத்தனை நாளா?

நர்ஸ் எதும் லவ் கிவ்வு//

கிழிஞ்சுது போ , நீங்க வேற புதுப் புரளிய கிளப்பிக்கிட்டு ....

sakthi said...

welcome back maya thee

sakthi said...

கழிந்து
போகின்ற
ஒவ்வொரு நாளும்
என் ஆயுளின்
ஒரு நாள்
என்று
தெரிந்தாலும்
ஒரு நாளைக்கூட
என்னால்
சேமிக்க
முடிந்ததில்லை...


கழிந்து போய் கொண்டே இருப்பது தானே வாழ்கை

sakthi said...

இருந்தாலும்
நேற்றில்
நாளையில்
இருக்கும்
ஒரு நிமிஷத்தைக்கூட
கூட
இன்றில்
கண்டு பிடிக்க
முடியவில்லை...

அற்புதம் ....

நல்ல வரிகள்

வெகு நாட்களுக்கு பிறகு பதிவிடுகின்றீர்கள் தொடருங்கள்
வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

வாங்க மயாதி. உங்கள் மெயில் வந்த கையோடு கவிதையும் வந்தது. கவிதை வழக்கம்போல் நன்றாக உள்ளது.

போன பிறகுதானே இணையம் கிடைக்கவில்லை. போகும் முன் சொல்லி இருக்கலாமே.

T.V.Radhakrishnan said...

அருமை

அபுஅஃப்ஸர் said...

நல்லாயிருக்கு மயதி

நீண்டநாள் கழித்து

சந்ரு said...

//கழிந்து
போகின்ற
ஒவ்வொரு நாளும்
என் ஆயுளின்
ஒரு நாள்
என்று
தெரிந்தாலும்
ஒரு நாளைக்கூட
என்னால்
சேமிக்க
முடிந்ததில்லை...//


மிகவும் அருமையான கவிதை..

மண்குதிரை said...

nalla irukku thozhi rasiththeen

தமிழினி said...

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

ரெட்மகி said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்
கவிதையோட வந்திருக்கிங்க ..

அருமை தோழா ...

காடுவெட்டி said...

ங்கொக்காமக்கா எப்பிடிங்க இப்பிடியெல்லாம்

சுசி said...

அருமை மயாதி. போறப்போ ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்களேம்பா.....

J.S.ஞானசேகர் said...

அருமை