7.04.2009

ஓரினச் சேர்க்கையும் நம் எழுத்தாளர்களும்

இப்போது தமிழ் மண முகப்பை திறந்தாலே பிரதான விடயமாக தெரிவது ஓரினச்சேர்க்கை சம்பந்தமான தலைப்புக்களே.

ஆச்சரியமாக இருக்கிறது!

சில வருடங்களுக்கு முன் இப்படி வெளிப்படையாக இத்தனை பேரால் இந்த விடயம் துணிந்து கதைக்கப்பட்டதா?

பல வருடங்களுக்கு முன் இவ்வளவு பெரியளவில் பேசாவிட்டாலும் ஆண்டவன் காலத்திலேயே ஓரினச் சேர்க்கை இருந்ததற்கான சான்றுகளை பட்டியலிட்டே பல இடுகைகள் இப்போது இடப்படுகின்றன.
இருந்திருக்கலாம்!
ஆனால் அவை ரகசியமாகவே இருந்திருக்கும். இப்போதும் அப்படி ரகசியமாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என் இதை அம்பலமாக்கி அதற்கு ஒரு சமூக அந்தஸ்தை உருவாக்க முனைகிறீர்கள்.

உண்மையில் வெளிநாட்டவர்களிடம் இருக்கும் அத்தனை மாற்று பாலியல் வழிமுறைகளும் எம் சமூகத்திலும் இருக்கின்றன, ஆனால் அவற்றை வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி அங்கிகாரம் பெற்று நெடு நாட்களுக்குப் பிறகே நம்வர்கள் பேசத்தொடங்கி உள்ளார்கள். இவ்வாறு நம்வர்களையும் பேச வைத்த துணிச்சல் நம் எழுத்தாளர்களையும் , சினிமாவையுமே சாரும்.

ஒரு சினிமாவில் வடிவேல் `` நீ அவனா?`` என்று கேட்ட வசனம் எந்தளவிற்கு பிரபலமானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் , அதே போல் மொழி திரைப்படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட ஓரினச்சேர்க்கை பற்றிய காட்சிகள் போன்ற காட்சிகளையும் நாம் ரசித்தோம். இப்படிப் பட்டகாட்சிகள் இப்போது சர்வசாதரணமாக படங்களிலே வரத்தொடங்கி விட்டன.

அதேபோல நம் எழுத்தாளர்களும் சர்வ சாதாரணமாக இதைப்பற்றி எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
உதாரணத்திற்காக ஒன்று ,

//ஒரு மாதுவின் துணை இல்லாமல் இரண்டு ஆண்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மதுவின் துணையாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள், " வேறு மாதிரி' ஆட்களாக இருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. ஆனால், எங்களுடைய சந்திப்புக்கான செலவு, மாதம் ஒன்றரை லட்சம்.//

இது ஒரு பிரபலத்தின் கதையின் சிறு பகுதி.

அதேபோல் பயர் என்றொரு படம் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது, அப்போது அந்தப் படம் வெளிவந்த பொழுது இருந்த எதிர்ப்பு இப்போது வெளியடப்படும் அதே கருத்துள்ள ஒரு படத்திற்கு நிச்சயமாக இருக்காது.

அந்தளவிற்கு நாம் முன்னேறி விட்டோம் என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாமா?

ஓரினச் செக்கை சம்பந்தமான எந்த ஒரு படைப்பையும்( பயர் உட்பட) பார்த்தபோது நான் உணர்ந்து கொண்டது, ஓரினச் சேர்க்கை பற்றிய அவர்களின் கருத்தை சிறப்பான படைப்பாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கை பற்றி அவர்கள் அறிந்திருப்பது ஒரு பக்கம்தான் , அதற்கு இன்னுமொரு கொடுமையான முகமும் இருக்கிறது என்பதை, நிச்சயமாக இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் கூட மறுக்க முடியாது.

இவர்கள் எல்லோரும் கையில் எடுத்துக் கொள்வது ,மருத்துவ ஆதாராங்களை.
மருத்துவத்தின் படி ஓரினச்சேர்க்கை என்பது மன நோயோ அல்லது மருத்தவரிடம் காட்டப்பட வேண்டிய விடயமோ இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இதை மையமாக வைத்துதான இன்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பேசும் அனைவரும் வாதிடுகிறார்கள்.

ஆனால் இவர்களுக்குத் தெரியுமா?

ஆண் பெண் புணர்தலின் போது எயிட்ஸ் தொற்றுவதை விட ஓரினச் சேர்க்கையின் போது தொற்றுவதற்கான சந்தர்ப்பம் எத்தனையோ மடங்கு அதிகம்.

மற்றது, ஆண் பெண் உறவின் போது எயிட்சை தடுப்பதற்காக இல்லாவிட்டாலும் கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்காகவேனும் கொண்டம் பயன்படுத்துவார்கள். அது அவர்களை அறியாமலேயே எயிட்ஸ் பரவுதலை தடுக்கலாம். ஆனால் இந்த ஓரினச் சேர்க்கை மனிதர்களுக்கு கர்ப்பம் என்றொரு பயமே இல்லை, ஆக இவர்களுக்கு எயிட்ஸ் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி கொண்டம் பாயன்படுத்தும் போது இந்தியா வல்லரசாக ஆகும் முன் எயிட்ஸ் அரசாக மாறிவிடும்.

எயிட்ஸ் என்பதை தாண்டி மற்ற எல்லாவிதமான பாலியல் தொற்றும் ஓரினச் சேர்க்கையில் ஏற்படும்.

இவர்களுக்கு மலவாயில் புற்று நாய் இவர்களுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் gay bowel syndrom எனும் நாய் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கு ஏற்படலாம்.

மற்றும் ஓரினச் சேர்க்கை செய்யும் நபர்களின் இடையே போதைப் பழக்கமும் சர்வ சாதரணமாக இருக்கின்றது.


இது எது பற்றியும் அறியாமலேயே அல்லது அறிந்திருந்தாலும் இவற்றை தவிர்த்து , ஓரினச் சேர்க்கை என்பதும் ஒரு உணர்வுதான் அவற்றை நாம் மதிக்க வேண்டும் என்பது போலவே இவர்களின் படைப்பும் இருக்கிறது.

அதற்கப்பால் இந்தப் படைப்பாளிகளின் சமூகப் பார்வையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது. இவர்கள் அறிந்திருப்பது ஓரினச்சேர்க்கை என்பது ஒரே நிலையில் இருக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு என்றுதான் . இவ்வாறு மட்டும் இருந்தால் பரவாய் இல்லை , எல்லோரும் சகித்துக் கொள்ள பழகிவிடுவார்கள்.
இன்று கள்ளக் காதலர்கள் வெளிப்படையாக செய்கின்ற சில்மிசங்களைச் சகித்துக் கொள்வதைப்போல , ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் பீச்சிலும் , பஸ்சிலும் செய்கின்ற சில்மிசங்களையும் சகித்துக் கொள்வார்கள்.

ஆனால் இதற்கு அப்பாலும் இது மாபெரும் கலாச்சாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை ஒரு துளி கூட யோசிப்பதாக இவர்களின் படைப்புக்களில் காட்டவில்லை.

குறிப்பாக குழந்தைகளோடு உறவு கொள்ளவே விரும்பும் அநேகமான பெரிய மனிதர்கள் ஓரினச் சேர்க்கை வாதிகள். ஆக , நீங்கள் ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்குவதன் மூலம் ஓரினச் சேர்க்கை வாதிகளின் எண்ணிக்கையைக் அதிகரித்து விட்டால், சீரழியப் போவது நம் குழந்தைகளும்தான் .

மற்றும் ஒரு பெண் பிள்ளையை ஒரு ஆண் திருட்டுத் தனமாக கடத்திப் போய் துஷ்பிரயோகம் செய்வது என்பது , கடினமானது, மற்றவர்களால் இலகுவாக இன் காணப்பட்டு தடுக்கப் படக்கூடியது .
ஆனால் ஒரு ஆண் ஒரு ஆண் பிள்ளையை ஏமாற்றிக் கொண்டு போய் துஷ் பிரயோகம் செய்வதை இனங்கண்டு தடுப்பது என்பது சாத்தியம் குறைவானது.

ஓரினச் சேர்க்கை என்னும் செயற்பாடு அதிகமாக நடைபெறும் சந்தர்ப்பம் ராணுவத்தில் இருக்கும் படை வீரர்களுக்கிடையேயும் , விடுதிகளில் தங்கி உள்ள பெண்கள் / ஆண்களுக்கிடையேயும் (இது என் கணிப்பல்ல கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில்).

ராணுவத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கைவாதிகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் , அவர்கள் ராணுவ சேவைக்கு உரிய மன நிலைமை அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓரினச் சேர்க்கை செய்வோரின் மனநிலைமை, மற்றவர்களிடம் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடத்தான் செய்கிறது.

யார் சொன்னாலும் , சொல்லாவிட்டாலும் எமது சமூகத்திலும் ஒரினச்செர்ககி இருக்கத்தான் செய்தது. இவ்வளவு காலமும் ரகசியமாக இருந்த இந்த செயற்பாட்டுக்கு எமது சமூகத்திலேயே அங்கிகாரம் தாருங்கள் என்று போராடும் அளவிற்கு காரணம் நமது படைப்பாளிகளே.

ஒரு விடயம் தொடர்ச்சியாக எதிர்க்கப்படும் போதும் , திரும்ப திரும்ப எழுதப் பட்டால் அதுவே மக்கள் மனதில் பதிந்து போய் விடும். பிறகு மக்களும் அந்த விடயத்தை வெளிப்படையாக பேசத்தொடங்கி விடுவார்கள். அதுதான் இப்போது இந்த ஓரினச் சேர்க்கை விடயத்தில் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவே ஓரினச் சேர்க்கை பற்றி எழுதும் நபர்களே, படம் பன்னுபவர்களே!

நீங்கள் வெறுமனே ஓரினச்சேர்க்கை செய்து சந்தோசமாக இருக்கும் நபர்களின் உணர்வுகளை மட்டும் அறிந்து வைத்துக்கொண்டு , இது பற்றி பேசுவதை விட்டு, ஓரினச் சேர்க்கை காரணமாக சீரழிந்து போன நபர்களின் அனுபவங்களையும் அறிந்து விட்டு பேசினீர்களே ஆனால் மட்டுமே உங்களால் அந்த விடயத்தை நேர்த்தியாக பேசமுடியும்.

அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது நூறு வீதம் சரி என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக அவர்களின் உணர்வை மதித்து சமூக அந்தஸ்தை வழங்கி அந்த மனநிலையை இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தி சீராக வாழ்பவர்களையும் சீரழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்.


குறிப்பாக தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று முத்திரை குத்திக் கொண்டு கடவுளே ஓரினச் சேர்க்கை செய்யும் போது மக்கள் என் செய்ய முடியாது என்று வாதிடும் நபர்களே !
நீங்கள் கடவுளை எதிர்ப்பது உங்கள் உரிமைய ஆனால் ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்க நினைப்பது எந்த வகையில் நியாயம் .

இறுதியாக ஒரு கேள்வி!!!!!!!!!!!

ஓரினச் சேர்க்கை போல்தான் , இன்செஸ்ட்(incest) () எனப்படுவதும் ஒரு மாற்று பாலியல் செயற்பாடுதான். இதைப்பற்றியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளார்கள். சில காலங்களில் அவர்கள் இதற்கும் அங்கிகாரம் தேவை என்று போராடலாம்.
(பிணங்களோடு உறவு கொள்ளும் மனிதர்கள் என்ற http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_9503.html இந்தப் பதிவையும் பாருங்கள்)

இப்போது ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் தேடும் பகுத்தறிவு வாதிகளே! ஓரினச்சேர்க்கை கருத்துக்களை சமூகத்திற்குள் விதிக்கும் எழுத்தாளர்களே!

இன்செஸ்ட் என்பதற்கு ஏதாவது ஒரு வெளிநாடு அங்கிகாரம் வழங்கினால் நீங்களும் அதற்கு அங்கிகாரம் வேண்டும் என்று போராடுவீர்களா?

இன்செஸ்ட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத உறவுகளோடு உறவு வைத்தலைக் குறிப்பது. அதாவது தாய் மகன் உறவு, அப்பா மகள் உறவு, சகோதரன் சகோதரி உறவு கொள்ளுதல்.

இந்த விடயத்திகும் அங்கிகாரம் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இப்போதே நம்மவர்கள் வெளிப்படையாக , தந்தை மகள் உறவு பற்றி பேசுகிறோம்.

// மகளை வன்புணர்ச்சி செய்யப் போனதால்தான், அவரது முதல் மனைவி அவரை அடித்து விரட்டினார். //

இது இப்போது வெளிப்படையாக பேசப்படும் ஒரு விடயம். இது உண்மையா பொய்யா என்று ஒரு துளி கூட எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொல்வது, இப்படியே நாம் வெளிப்படையாகப் பேசத் தொடங்குவது, கொஞ்சம் கொஞ்சமாக பெருகி ஒருகாலத்தில் அதற்கும் அங்கிகாரம் வேண்டும் என்ற ஒரு நிலைக்கு நம் சமூகத்தை கொண்டு விடலாம்.

அப்போது பயர் என்ற ஓரினச் சேர்க்கை என்ற உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய படம் போல் , தாய் மகன் உறவு கொள்வதை சிறப்பாக வெளியிடும் ஒரு படமோ, அல்லது வடிவேல் தன மகள் முறையான பெண்ணோடு உறவு கொள்வது போல் ஒரு நகைச்சுவைக் காட்சியோ எடுக்கப்பட்டால் ஆச்சரியம் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு முன் ஓரினச் சேர்க்கைய எதிர்த்தது போல இந்தப் படங்களையும் எதிர்ப்போம், பிறகு திடீரென ஒருநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இப்படி விருப்பப் பட்டு தகாத உறவு வைப்பதும் தவறு இல்லை என்று( இன்று ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்கி உள்ளத்தைப் போல) .

அப்போது நம் பகுத்தறிவு வாதிகள் என்று எழுதும் நண்பர்கள் பார்வதியும் முருகனும் உறவு வைத்து இருந்தார்கள் என்று சான்று பகிரத் தொடங்குவார்கள்.

ஓரினச் சேர்க்கை செய்பவர்களின் உணர்வை நாம் மதிக்க வேண்டு என்று கேட்பவர்களே!
அப்படியானால் இன்செஸ்ட் நடைமுறையில் உள்ளவர்களின் உணர்வையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்யும்.

இறுதியாக இரண்டு விஞ்ஞானக் கருத்துக்களும் என் கருத்தும்....

உடலுறவு (sex) சென்பது இனங்களின் நிலவுகைக்கு அத்தியாவசியமானது, தனி மனிதர்களின் நிலவுகைக்கு அல்ல.

தன் இனத்தைப் பேருக்கும் வல்லமை உள்ளதே தனியன் எனப்படும். அப்படியானால் இனம் பேருக்கும் வல்லமை இல்லாத ஓரினச் சேர்க்கை செய்யும் நண்பர்கள் சனியன் என்றா சொல்லப்படும் .

23 comments:

குப்பன்_யாஹூ said...

i feel u have written this post without reading delhi court judgement and article 377 in full.

It clearly now says that sex with same gender (adult 18+) with consent is not punishable.

மயாதி said...

குப்பன்_யாஹூ said...

i feel u have written this post without reading delhi court judgement and article 377 in full.

It clearly now says that sex with same gender (adult 18+) with consent is not punishable.//

i feel u didnt read my article completely before ommenting. please read any article completly before comment.

மயாதி said...
This comment has been removed by the author.
Suresh Kumar said...

நன்றாக அலசி உள்ளீர்கள்

Keith Kumarasamy said...

மயாதி... இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்... தாய்-மகன், அப்பா-மகள் உறவுகள் இல்லாவிட்டாலும், ரத்த உறவுகளுக்குள்ளே நிலவும் Incest எல்லா நாட்டிலும் பரவியிருக்கிறது. இவைபற்றி எல்லாம் பதிவர்கள் இவ்வளவு Public ஆகச் சொல்லத்தேவையில்லை.. என்னுடைய வாதம் ஒன்றுதான்.. ஓரினச்சேர்க்கை சரி தவறு என்ற வாதங்களுக்கு நான் வரவில்லை.. ஆனால் அதையே ஒரு காரணமாகவைத்து அப்படியான உறவில் ஈடுபடும் மனிதர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கக் கூடாது என்பது மட்டுமே எனது வாதம். மேலும், நீங்கள் சொன்னதுபோல் சிறுபிள்ளைகளை ஓரினச்சேர்க்கைக்குப் பாவிப்பது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்பின்னர்கூடக் குற்றம்தான். ஓரினச்சேர்க்கையின் ஆபத்தான மறுபக்கம் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மையானவையும் நேர்மையானவையும்.... எனது இன்னொரு வருத்தம் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்த இவர்கள் திருநங்கைகளைப் பாதுகாக்க சட்டம் ஏதும் இயற்றாமல் இருப்பதுதான்

மயாதி said...

Keith Kumarasamy said...

மயாதி... இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்... தாய்-மகன், அப்பா-மகள் உறவுகள் இல்லாவிட்டாலும், ரத்த உறவுகளுக்குள்ளே நிலவும் Incest எல்லா நாட்டிலும் பரவியிருக்கிறது. இவைபற்றி எல்லாம் பதிவர்கள் இவ்வளவு Public ஆகச் சொல்லத்தேவையில்லை.. என்னுடைய வாதம் ஒன்றுதான்.. ஓரினச்சேர்க்கை சரி தவறு என்ற வாதங்களுக்கு நான் வரவில்லை.. ஆனால் அதையே ஒரு காரணமாகவைத்து அப்படியான உறவில் ஈடுபடும் மனிதர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கக் கூடாது என்பது மட்டுமே எனது வாதம். மேலும், நீங்கள் சொன்னதுபோல் சிறுபிள்ளைகளை ஓரினச்சேர்க்கைக்குப் பாவிப்பது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்பின்னர்கூடக் குற்றம்தான். ஓரினச்சேர்க்கையின் ஆபத்தான மறுபக்கம் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மையானவையும் நேர்மையானவையும்.... எனது இன்னொரு வருத்தம் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்த இவர்கள் திருநங்கைகளைப் பாதுகாக்க சட்டம் ஏதும் இயற்றாமல் இருப்பதுதான்//

உங்கள் கருத்துக்கு நன்றி...

உங்கள் அநேகமான கருத்துக்களை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் சொல்லுவது ஓரினச்சேர்க்கை ஒருபுறம் மறைமுகமாக இவ்வளவு காலமும் நடந்தது போல் நடை பேர்டு. அதற்கு இப்படி பிரபல்யம் வழங்குவதன் மூலம் இன்னும் பல ஓரினச் சேர்க்கையாளர்களை நாம் உருவாக்குகிறோம்.
மற்றும் நான் .. சொன்னது , இது பற்றி எந்த படைப்புக்களும் உருவாக்கப் படக் கூடாது .என்பதற்காகவே..

மயாதி said...

Suresh Kumar said...

நன்றாக அலசி உள்ளீர்கள்//

நன்றி சுரேஷ்.

அபுஅஃப்ஸர் said...

மயாதி தெளிவான கருத்தையும், அதனால் சமூகத்திற்கும், மனித இனத்திற்கும் ஏற்படு தீங்கையிம் அழகா விளக்கியுள்ளீர்கள், எய்ட்ஸ் என்ணும் கொடிய நோய் ஏற்படுவதற்கு முதல் முக்கிய காரணம் இந்த பாலாய்போன ஓரினச்சேர்க்கைதான்.... அது தெரிந்தும் அதைதடுக்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் அரசாங்கம் ஒரு புறம் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது கொடுமையான ஒன்று, இது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும், அதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டும்.

சந்ரு said...

சமுகத்துக்கு பயனுள்ள நல்ல கருத்துக்கள் அருமை தொடருங்கள்...

ungalodu konjam said...

ஓரின சேர்க்கையின் கொடுர முகத்தை மிக தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் .
இந்தஓ கோணத்தில் பார்க்க கூட முடியாதவர்களாகத்தான் நீதிபதிகள் உள்ளார்களா?

colvin said...

எனது தனிப்பட்ட கருத்து யாதெனில் ஒரின சேர்க்கையும், இன்செட் உறவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. இவை சமுதாய அமைப்பை குழைக்க கூடியவை. புனிதமான ஒருவன் ஒருத்தி முறையே சிறந்தது.

ஓரின சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் தகாத உறவு முறைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டி வரும்

மற்றது சரியான பாலியல், சமய கல்வியூட்டல்கள் ஒருவரை சரியான வழியில் நடத்த உதவும்.

அன்புடன்
கொல்வின்
இலங்கை

தமிழரசி said...

பயனுள்ள பதிவு தான் இதை இங்கு சொன்னதோடு அல்லாமல் ஒரு கவுன்சிலிங் மாதிரியோ இல்லை இது தேவைப்படும் இடங்களில் பகிரப்பட்டால் பயன்பெரும்....விழிப்புணர்ச்சி பெருகிவரும் போதோ இம்மாதிரி இழிவுணர்ச்சியும் பெருகி வருவது வருந்தத்தக்கது தான்.....

நிகழ்காலத்தில்... said...

இயற்கையின் படைப்பில் ஆண், பெண் என்கிற அமைப்பே, சந்ததிகளை கலவியின் மூலம் பெருக்குவதே!

மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ்ந்தால் என்ன தவறு???

சப்ராஸ் அபூ பக்கர் said...

விரிவான அலசல்..... காம வெறியர்களுக்கு நிச்சயம் இதை சென்றடைய வையுங்கள்..

தொடருங்கள்.....

King... said...

:))

King... said...

ஓரினச்சேர்ககையையும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தையும் முடிச்சுப்போட வேண்டாம் அது வேறு, இது வேறு.

Anonymous said...

nalla pathivu. eni ithai pathi padangal varum. homo sexuals are soem sort of mentally disordered ppl. in usa it was allowed because of it gained some votes. pls india india endu sollukravarkall elllam sex vakkiram pidithaarkal than. ex. india today. It carried a city giude which arraged with the night clubs in 90's. tamilarkal tamilarkalai iruppoom.

sakthi said...

இது மாபெரும் கலாச்சாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை ஒரு துளி கூட யோசிப்பதாக இவர்களின் படைப்புக்களில் காட்டவில்லை.

அருமையான அலசல்

மிகத்தெளிவான கட்டுரை

பாலா said...

kai thattrathu kaathula vizhuthaa mayathi sir

alasi kaaya pottuteenga

en solla
arumai (ithu kuraivaana vaarththaiye )

natpudan

bala

ரெட்மகி said...

உங்கள் கருத்தில் சில ஏற்புடையதாக இல்லை....
நாம் எப்படி இந்த பிரச்சனையை எதிர் கொள்வது என்று பார்க்க வேண்டும் , நீங்கள் சொல்வது உண்மைதான் ,அவர்கள் மூலம்தான் AIDS அதிகமாக
பரவுகின்றது , ஆனால் LGBT பற்றி பேசாமல் இருப்பதனால் ,
AIDS நோய் LGBT-ஆல் பரவுவது குறைந்து விடுமா என்ன ? அதை மூடி மறைப்பதனால்
ஒரு பயனும் இல்லை ... நமக்கு தேவை அதிகமான விழிப்புணர்வு.... என்பது அடியேனின் கருத்து ...

LGBT பற்றி சட்டம் தவறு என்று சொல்வது சரி இல்லை,அதை குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது

பாலமுருகன் said...

இயற்கைக்கு மாறான எதுவுமே தவறுதான் . தங்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன் .

Bleachingpowder said...

//பாலமுருகன் said...
இயற்கைக்கு மாறான எதுவுமே தவறுதான் //

அப்போ Condoms ?? அதுவும் தவறா??

Anonymous said...

stupid argument.

ஆண் பெண் புணர்தலின் போது எயிட்ஸ் தொற்றுவதை விட ஓரினச் சேர்க்கையின் போது தொற்றுவதற்கான சந்தர்ப்பம் எத்தனையோ மடங்கு அதிகம்
>> safe illama panna, ellame danger thaan...ithula ethu better nu kanakku kidaiyathu.

pls see comments in ungalodukonjam blog.