6.03.2012

எஸ் .பி.பி க்கு எனது பிறந்தநாள் பரிசு

தமிழுக்கு
சாமரம் வீசும்
உன் நாக்கு

குரல் வளைக்குப்
பதிலாக
உனக்கு மட்டும்
சுருதிப் பெட்டியை
வைத்துவிட்டான்
கடவுள்

ராகத்தில்
வேண்டுமானால் வெறும்
ஏழு ஸ்வரங்கள்
இருக்கலாம்
உன் குரலில்
எண்ணிக்கையில்லா
ஸ்வரங்கள்

உன் உச்சரிப்பில்
மீண்டும் ஒருமுறை
உயிர்த்தெழும்
தமிழ்

தமிழுக்குப்
பெருமை சேர்த்தவர்களில்
நீயும் ஒருவன்

உன் குரல்
இன்னும்
ஓங்கி ஒலிக்கட்டும்


1 comment:

கோவி.கண்ணன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ்பிபி. நல்வாழ்த்துகள்.