5.10.2011

முத்தமின்றி ?

அளவுக்கதிகமாகக்

கொடுத்தாலும்
நஞ்ஞாகி
விடுவதில்லை
முத்தம்

முத்தம்
கொடுத்ததால்
கோபித்துக்கொண்ட
காதலியின்
கோபத்தைப்
போக்கியது...
ஒரு
முத்தம்


உனக்கு
ரகசியமாய்
கொடுக்கிற
முத்தத்தை
வெட்கத்தில்
வெளிப்படுத்தி
விடுகிறாய்...


வார்த்தைகளால்
வெளிப்படுத்த
முடியாத
காதலின்
விஸ்த்தீரத்தை
சிலவேளைகளில்
ஒற்றை
முத்தம்
வெளிப்படுத்தி
விடுகிறது


பேசுகிற
வார்த்தைகள்
தேவையற்றதாகிப்
போகலாம்
கொடுக்கிற
முத்தம்
எப்போதும்
தேவையற்றதாகிப்
போய்விடாது


பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை


உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்



உனக்கும்
எனக்கும்
இடையே
சின்னதாய்
ஒரு
இடைவெளி
வந்தாலும்
நுழைந்து விடுகிறது
ஒரு
முத்தம்



எனக்கு
காதலிக்காமல்
எப்படி
வாழத்தெரியாதோ
அப்படித்தான்
முத்தமிடாமலும்
காதலிக்கத்
தெரியாது


அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவை.....

6 comments:

ரேவா said...

அளவுக்கதிகமாகக்கொடுத்தாலும்
நஞ்ஞாகி
விடுவதில்லை
முத்தம்...

அதானே,,,சூப்பர் சூப்பர் :-)

ரேவா said...

காதலியின்
கோபத்தைப்
போக்கியது...
ஒரு
முத்தம்

இப்போ கிப்ட் லாம் வாங்கித் தருவது இல்லையா?...

ரேவா said...

பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை

அழகான எதிர்பார்ப்பு :-)

ரேவா said...

உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்



எனக்கு ரொம்ப பிடித்த இடம் இது தான் :-)

ரேவா said...

எனக்கு
காதலிக்காமல்
எப்படி
வாழத்தெரியாதோ
அப்படித்தான்
முத்தமிடாமலும்
காதலிக்கத்
தெரியாது :-)

அழகான அன்பை உணர்த்தும் கவிதை...ஒவ்வொரு கவிதையும் அன்பை உணர்த்தும் முத்(த்தக்)தான கவிதையாய்...சும்மானு சொன்ன கவிதையே சூப்பர் அஹ இருக்கு.... வாழ்த்துக்கள் நண்பா

Dhilip said...

பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை....

மிக நிச்சயமான உண்மை