5.25.2011

காதல் பழமொழிகள்

காதல் பிறப்பதில்லை அவதரிக்கிறது

முத்தம் காதலுக்கு முத்தாய்ப்பு

மௌனம் காதலுக்கு கலங்கரை விளக்கு

காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது

காத்திருப்பது காதலின் பொற்காலம்

காதல் இருவருக்கிடையே அல்ல எல்லோரையும் சுற்றி இருக்கிறது

.................................................................................................................................................

அவள் எழுத்துக்கூட்டி படிக்கும் போதுதான்
கணக்குப்படித்தது தமிழ்

அவள் அவ்வளவு அழகா என்பவர்களிடம் சொல்லிக்கொள்வது
எவ்வளவு அழகு என்று சொல்லிக்கொள்ள முடியாதவள் அவள்

வாய் பேச வராத ஊமைக்கும்
அவளைப்பார்த்தால் கவிதை பேச வரும்

அவள் என்னோடு இருக்கும் பொழுது மட்டுமே
நானும் என்னோடு இருக்கிறேன்

அவளைக் கை பிடிக்க ஆசையில்லை
உயிர் பிடிக்கத்தான் ஆசை

வாழும் போது மட்டுமல்ல சாகும் போதும்
வாழ வேண்டும் அவளோடு

10 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல தொகுப்பு...

ரேவா said...

காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது

உண்மைதான் :-)

ரேவா said...

அவள் எழுத்துக்கூட்டி படிக்கும் போதுதான் கணக்குப்படித்தது தமிழ்

பார்டா...

ரேவா said...

வாய் பேச வராத ஊமைக்கும் அவளைப்பார்த்தால் கவிதை பேச வரும்

முடியல நண்பா, அழகா இருக்கு அத்தன காதல் மொழியும்...இந்த மாதிரி பழமொழி நெறயா எழுதுங்க, அபோ தான் நான் ஏதாவது develop பண்ண முடியும்...ஹி ஹி

ரேவா said...

வாழும் போது மட்டுமல்ல சாகும் போதும்வாழ வேண்டும் அவளோடு....

தாஜ் மஹால் ஓவியக் காதல்,
தனி ரகம் மயாதி காதல்...ஓஹ ஹோ....

மயாதி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல தொகுப்பு...

//

நன்றி நண்பரே

மயாதி said...

ரேவா said...
காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது

உண்மைதான் :-)

//

நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்களா ? அப்பா உண்மைதான்

மயாதி said...

ரேவா said...
வாய் பேச வராத ஊமைக்கும் அவளைப்பார்த்தால் கவிதை பேச வரும்

முடியல நண்பா, அழகா இருக்கு அத்தன காதல் மொழியும்...இந்த மாதிரி பழமொழி நெறயா எழுதுங்க, அபோ தான் நான் ஏதாவது develop பண்ண முடியும்...ஹி ஹி

//

என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே ?

மயாதி said...

ரேவா said...
வாழும் போது மட்டுமல்ல சாகும் போதும்வாழ வேண்டும் அவளோடு....

தாஜ் மஹால் ஓவியக் காதல்,
தனி ரகம் மயாதி காதல்...ஓஹ ஹோ./ஐயோ தப்பா நினைச்சிட்டீங்களே -கவிதை எழுதுறது மட்டும்தான் நம்ம வேலை காதலிப்பதில்லை

ப்ரியமுடன் வசந்த் said...

kikikiki :)))))))