5.25.2011

காதல் படுத்தும் பாடு

நான் வாழ்வதற்காகத்தான் பிறந்திருக்கிறேன் என்று தவறாக நினைத்துக்

கொண்டுவாழ்ந்து கொண்டிருந்தேன் .உன்னைப்பார்த்த பின்புதான் நான்

பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு

காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.


காதலுக்கும் வாழ்க்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் . வாழ்வதற்கு

கட்டாயம்உயிரோடு இருந்தாக வேண்டும் .காதலிப்பதற்கு உயிர் ஒன்றும்

அவசியமில்லை.


வாழ்க்கையை இழந்தபின் கடவுளாக இருந்தால் உயித்தெழலாம். காதலை

இழந்தபின் கடவுளாக இருந்தால்கூட உயிர்த்தெழ முடியாது.


......................................................................................................................................................................


அவளைப்பற்றி ஒரு கவிதை சொல்லச் சொன்னாள்.நான் மௌனமாகவே

இருந்தேன் . கோபித்துக்கொண்டு போய் விட்டால். மௌனத்தை புரிந்து

கொள்வது எப்படி என்று அவளுக்குச் சொல்லிக்கொடுக்காதது என் தவறுதான் .


அவளிடம் ஒரு முத்தம் கேட்டபோது மறுத்துவிட்டு வீட்டுக்குப் போனபின்பு

போன் பண்ணி நீ பாவம்டாஎன்று கொஞ்சினால் . அவளுக்குத் தெரியாது அவள்

தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.


கோயிலுக்குப் போகும் பெண்கள் எல்லா பூ பறித்துக்கொண்டு சாமிக்குச்

சாத்தி விட்டு வருவார்கள். அவள் மட்டும் வெறும் கையேடு போய்

புன்னகைத்து விட்டு வருவாள் .சாமியும் நானும் மட்டும் புரிந்து கொள்வோம் .


தடுக்கி விழுந்த அவள் எழுந்து போய் விட்டால்.என்னால் இன்னும் எழ முடியவில்லை.


..............................................................................................................................................................வானத்தில் மிதக்க சிறகு வேணும். காதலில் மிதக்க கனவு வேணும்.


கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.


வாசிப்பு அறிவை பூரணமாக்கும் காதல் முழு மனிதனையே பூரணமாக்கும்.


தாய்க்குப்பின் தாரம் கடவுளுக்கு முன் காதலி.


நான் வாழ்வதற்கு உயிர் தேவையில்லை அவள் போதும்.BY- மயாதி

13 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.Share

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் அருமை...

உரைநடைக்கவிதை...

திகழ் said...

இரசித்தேன்

ரேவா said...

உன்னைப்பார்த்த பின்புதான் நான்

பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு

காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.

சோ மயாதி நல்ல மருத்துவர், கூட நல்ல காதலனும் அஹ,,,,,

ரேவா said...

அவள்தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.

அட அட மன்மதன் உங்க கிட்ட கடன் வாங்கணும் போல...

ரேவா said...

கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.

எனக்கு இந்த ரெண்டுமே இல்லையே...ஏதாவது மருந்து எழுதி தாறீங்களா நண்பா...

ரேவா said...

நான் வாழ்வதற்கு உயிர் தேவையில்லை அவள் போதும்.


வாறே வா...என்னாமா எழுதுறேங்க நண்பா...சூப்பர்...நான் இந்த பதிவ facebook ல படிச்சிட்டு தான் இங்க வந்து கமெண்ட் போடுறேன்...சூப்பர்...

மயாதி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மையில் அருமை...

உரைநடைக்கவிதை...//

நன்றி நண்பா

மயாதி said...

திகழ் said...
இரசித்தேன்

//

நன்றி நண்பா

மயாதி said...

ரேவா said...
உன்னைப்பார்த்த பின்புதான் நான்

பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு

காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.

சோ மயாதி நல்ல மருத்துவர், கூட நல்ல காதலனும் அஹ,,,,,

//


நல்ல காதலனா? காதலியே இல்லாதவன் எப்படி காதலன் ஆக முடியும் தோழி

மயாதி said...

ரேவா said...
கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.

எனக்கு இந்த ரெண்டுமே இல்லையே...ஏதாவது மருந்து எழுதி தாறீங்களா நண்பா...
//

அப்ப நீங்களும் நம்ம கட்சிதானா?

மயாதி said...

ரேவா said...
அவள்தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.

அட அட மன்மதன் உங்க கிட்ட கடன் வாங்கணும் போல...

//
அப்படீனா நான் play boyஎன்று சொல்றீங்களா ?

ரேவா said...

அப்படீனா நான் play boyஎன்று சொல்றீங்களா ?

iyo naan apdi sollala pa...romantic ah irunthathunu sonnen....hehe