5.27.2010

வாழ்க்கை நிறையக் கவிதை

நன்றி நிறையக்
கவிதை நிரம்பி
இருக்கிறது
தெரியாத ஒரு
அழகான பொண்ணு
சொல்லும்
`தங் யூ `வில் ..
................................................

பக்கத்து
வீட்டுப் பையன்
மோட்டார் பைக்கில்
போவதைப் பார்த்து
எனக்கும் வாங்கிக்
கொடுக்க
வசதியில்லையே
எனக் கவலைப்படும்
அப்பா அம்மாவைப்
பார்த்துச்
சந்தோசப்பட்டுக்
கொண்டேன்
கொடுத்து
வைத்திருக்க வேண்டும்
இப்படி
அம்மா அப்பா
கிடைக்க...


.............................................................


பிள்ளைகள்
வளர்ந்து விட்டதால்
பிள்ளைகள் மீது
அப்பா கோபப்படுவதை
அம்மா தடுத்து நிறுத்துவதாய்
முடிந்து விடுகிறது
இருவருக்குமிடையான
சில்மிஷம் ...


4 comments:

soundar said...

வாழ்கையின் நிஜம் கவிதையாக வந்துள்ளது

VELU.G said...

நல்ல கவிதைகள்

வாழ்த்துக்கள்

மயாதி said...

நன்றி
soundar
VELU.G

மதுரை சரவணன் said...

பெற்றேர்கள் நிஜம் . வாழ்த்துக்கள். எதர்த்தத்தை எடுத்துச் சொல்லும் கவிதைகள்