5.23.2010

சொல்வதெல்லாம் காதலின்றி வேறில்லை

உனக்குப்
பிடிக்காத

நான்
எனக்கெதற்கு?
நான் என்பதை
எறிந்து
ஞானியாகிப்
போனேன்
மீண்டும்
மனிதனாகவேண்டும்!
என்னைக் கொடுத்துவிடு
என்னிடம் .

.............................................................

என்னைப்
பார்க்கின்ற போதெல்லாம்
உனக்கு வருகின்ற
கோபங்களுக்கிடையே
எப்போதாவது
காதலும்
வரும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் ....


.................................................

என்னைப்
பிடிக்காததிற்கு
ஆயிரம்
காரணம்
சொல்லலாம்
நீ

உன்னைப் பிடித்ததிற்கு
ஒரே ஒரு
காரணம்
காதல்


..................................................

நீ
பட்டாம் பூச்சியை
ரசித்துக்
கொண்டிருந்தாய்

நான்
உன்னை ரசித்துக்
கொண்டிருந்தேன்

கடைசியில்
பட்டாம் பூச்சி
உன்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனது
நீ
என்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனாய் ....

2 comments:

அன்புடன் அருணா said...

/உனக்குப்
பிடிக்காத
நான்
எனக்கெதற்கு?
நான் என்பதை
எறிந்து
ஞானியாகிப்
போனேன்/
ரொம்பவும் அருமையாய் அழகாய் எழுதிருக்கீங்க!பூங்கொத்து!

கமலேஷ் said...

எல்லாமே நல்லா இருக்குங்க....