9.19.2009
நீ உதிர்த்த(சு)வை
எத்தனையோ
அழகான
பெண்களைப்
பார்த்த
போதெல்லாம்
காதலிக்கவே
மாட்டேன்
என்று காதலோடு
அடம்பிடித்துக்
கொண்டிருந்தேன்!
பாழாய்ப் போன
காதல்
கடைசியில்
உன்னை அனுப்பி
என்னைப்
பழிவாங்கி
விட்டது.....
************************
கடவுளுக்கு
நிறைய
அவதாரம்
காதலுக்கு
ஒரே ஒரு
அவதாரம்
நீ....
************************
உன்னைப் பார்த்த
நொடியில்
இறந்து போய்....
என்
வாழ்க்கையின்
மீதி நாட்களை
உன்னோடு
வாழ்வதற்காக
சேமித்து விட்டேன்!
வா
உயிர்பெற்று
மீதியை
வாழ்ந்து முடிக்க
வேண்டும் ...
*********************
நீ வெட்டிப்
போடும்
நகம்
முளைக்கிறது
கவிதையாய்...
யார் சொன்னது
நகங்களுக்கு
உயிர்-
இல்லையென்று...
************************
நீ சூடிக்
கொள்வதற்காய்
ஒரு
பூப்பறித்தாய்
நீ பறித்த
பூ மீண்டும்
ஒருதடவை
மலர்ந்தது...
பறிக்காத
பூக்கள்
அந்தியாகும்
முன்னே
வாடிப்போகின....
*********************
உனக்கு பரிசு
வாங்குவதற்காய்
கடைகளில்
ஏறி இறங்கும்
போதெல்லாம்
கடைசியில்
என்னையே
வாங்கி
வருகின்றேன்....
********************
நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவிதைகளை
கண்டுபிடிக்கும்
கவிஞன்
உன் ஒவ்வொரு
அசைவிலும்
ஒளிந்திருக்கும்
கவிதைகளைக்
கண்டு பிடிக்கும்
கவிஞன்...
*********************
பாடம் சொன்ன
ஆசிரியரே
பாடத்தை
மறப்பதுபோல
எனக்கு காதலிக்க
கற்றுக் -
கொடுத்துவிட்டு
நீ
மறந்து போனாயே!
**********************
எனக்குள்
இருக்கும்
என்னையெல்லாம்
எடுத்தெறிந்து
கொண்டிருக்கிறேன்
உன்னைச்
சேமிக்க
இடம் போதாததால்.....
Labels:
கவிதை பாதி காதல் மீதி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கவிதை காதல் அவியல்....ஒரு விருந்துண்ட நிறைவும் சுவையும்......
மயாதி,
நீங்கள் இந்த பதிவில் எழுதியுள்ள கவிதைகள் அவ்வளவும் அருமையாக இருக்கின்றன..
இதை காப்பிரைட் பண்ணாமல் உலகுக்கே அர்பணித்த உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்..
மேலும் தொடருங்கள்..
Have a Nice Day.
அழகான கவிதை.பூங்கொத்து...
அழகான கவிதை மயாதி.பூங்கொத்து...
நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவிதைகளை
கண்டுபிடிக்கும்
கவிஞன்
உன் ஒவ்வொரு
அசைவிலும்
ஒளிந்திருக்கும்
கவிதைகளைக்
கண்டு பிடிக்கும்
கவிஞன்...
இத இப்படி மாத்தி இருந்தா இன்னம் அழகா இருந்துருக்குமோ தோணுது
நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவிதைகளை
கண்டுபிடிக்கும்
கலைஞன்
உன் ஒவ்வொரு
அசைவிலும்
ஒளிந்திருக்கும்
கவிதைகளைக்
கண்டு பிடிக்கும்
கலைஞன்
அவ்வளவே !!!
மன்னிக்க மயாதி உங்கள் அனுமதி இன்றி எடிட் செய்து விட்டேன்
சூப்பர் மயாதி. இடைவேளை விட்டு வந்தாலும் நல்ல சரக்குடன் தான் வந்திருக்கிறீர்.
வேலைப் பளு அதிகமாய்ப் போய் எங்களை உங்கள் கவிதைக்கு காக்க வைத்து விட்டது.
//உனக்கு பரிசு
வாங்குவதற்காய்
கடைகளில்
ஏறி இறங்கும்
போதெல்லாம்
கடைசியில்
என்னையே
வாங்கி
வருகின்றேன்....//
அழகுடா மாப்ள...!
Post a Comment